முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீதியை கிளப்பும் மாயன் காலண்டர்! நாளை உலகம் அழியுமா?

வியாழக்கிழமை, 20 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

லண்டன், டிச. 20 - கடந்த சில வருடங்களாக மாயன் நாட்காட்டி 2012.12.21 ம் தேதி காலை மணி 11 அளவில் முடிவுக்கு வருவதை மேற்கோள் காட்டி உலகம் அழிவை நெருங்குகிறது என்று இணையதளங்களும், திரைப்படங்களும் மக்களை பயமுறுத்தி வருகின்றன. மாயன் காலண்டர் என்றால் என்ன என்பதை தெரியாதவர்களுக்காக இந்த தகவல்:

கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்காவில் மாயா என்ற ஓர் இனம் இருந்தது. 3,500 ஆண்டுகள் வாழ்ந்த இந்த இனமானது கடந்த 15 ம் நூற்றாண்டில் அழிந்தது. இந்த இனத்தினர் விஞ்ஞானிகளை விடவும் புத்திசாலிகளாக வாழ்ந்ததாக சரித்திர சான்றுகள் கூறுகின்றன. மாயன் இனத்தவர் கட்டிடக் கலை, வான சாஸ்திரம், ஜோதிடம், அமானுஷ்யம், கணித சூத்திரம் போன்ற அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்ற வித்தகர்களாக இருந்தனர். 

இன்றைக்கு இருப்பது போன்ற ஒரு நாட்காட்டியினை அவர்களும் வைத்திருந்தனர். இந்த காலண்டர் கி.மு. 313 ல் தொடங்கியது. இதன்படி டிசம்பர் 2012 ம் ஆண்டு 21 ம் தேதியுடன் முடிவடைகிறது. அதாவது சூரிய மண்டலத்திற்கு 7 நாள் என்பது பூமியை பொறுத்தவரை 25,623 வருடங்களாம். இதனை மாயன் காலண்டர் 5 காலக்கட்டங்களாக பிரிக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டமும் 5,125 வருடங்களை கொண்டிருக்கிறது. இதன்படி 4 காலக்கட்டங்கள் முடிவடைந்து இப்போது 5 வது காலக்கட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த நாட்காட்டி 21.12.2012 ல் முடிவடைகிறது. அதன்படி 21.12.2012 ல் உலகு அழியும் என்று ஒரு சாரார் நம்புகிறார்கள். 

மாயன் குறிப்புகளில் இருந்து பல விஷயங்கள் அவர்கள் கணித்துபடி நடந்திருப்பதால் இதுவும் நடக்கலாம் என்பது பலரின் வாதம். ஆனால் மாயன் நாட்காட்டி முடியும் நாளில் உலகம் அழியும் என்று அவர்கள் ஓரிடத்திலும் குறிப்பிடப்படவில்லை. உலக அழிவு கணிப்புக்கு துணையாக இணையதளங்களில் நிபிரூ என்றொரு கிரகத்தின் உலகை நோக்கிய பயணம் விவாதிக்கப்பட்டது. சுமேரியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் இக்கிரகம் உலகிற்கு அருகாமையில் வரும் போது துருவ மாற்றம் நிகழும் என்றும், அதனால் பூமி சுழலும் அச்சின் சரிவு மாறி அதனால் பெரும் அழிவுகள் ஏற்படும் என்று எழுதப்படுகிறது. 

1984 ம் ஆண்டு நாசா ஒரு செய்தியை வெளியிட்டது. 50 பில்லியன் மைல்கள் தொலைவில் இருந்து ஒரு மிகப் பெரிய மர்ம பொருள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக கூறியது. மீண்டும் 1992 ம் ஆண்டு நாசா இன்னொரு செய்தியை வெளியிட்டது. 7 பில்லியன் மைல்கள் தொலைவில் இருந்து ஒரு கோள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக செய்தியை அது வெளியிட்டது. அதாவது அந்த மர்ம கிரகம் நம்மை இன்னும் கிட்ட நெருங்கியிருந்தது. இதற்கு அப்புறம் நாசா இதைப்பற்றி ஒரு மூச்சும் விடவில்லை. இதனை பலரும் புதுசாக கண்டுபிடிக்கப்பட்ட ஏரிஸ் என்ற கோள்தான் என்கின்றனர். ஆனால் இன்னொரு கூட்டமோ இப்படி நாசாவின் டெலஸ்கோப்புகளில் காணப்பட்ட மர்ம கோள் முன்பெல்லாம் பெரும் அழிவை உண்டாக்கிய நிபிரூதான் என்கின்றனர். 

எது எப்படி இருப்பினும் நமது உலகத்திற்கு அருகாமையில் இது வரைக்கும் எந்த கிரகமோ இல்லை. எரிகற்களோ இல்லை என்று நாசா சொல்வதை நம்பலாம். ஏனென்றால் அப்படி ஏதாவது 2012.12.21 வருவதாக இருந்தால் வேறு யாராவது விண்வெளி கண்காணிப்பாளர் கண்ணிலாவது பட்டிருக்கும். இந்நிலையில் உலக அழிவில் இருந்து தப்பிக்க பதுங்கு குழிகள், பாதாள அறைகள் அமைக்கும் வேலையிலும் மேலைநாடுகளில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்