முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சின் டெண்டுல்கருக்கு ஸ்கேன் பரிசோதனை

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

மும்பை,பிப்.23 - காலில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சச்சினுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. எனவே அவர் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நிச்சயமாக களமிறங்குவார். வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் வென்ற பின் சச்சின் மும்பை திரும்பியுள்ளார். இந்நிலையில் அவருக்கு கால் மூட்டில் லேசான வலி இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் காயம் ஏதும் ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டதை அடுத்து மும்பை லீலாவதி மருத்துவமனையில் சச்சினுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு மூட்டில் காயம் ஏதும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பெங்களூர் செல்லும் அவர் இங்கிலாந்துக்கு எதிராக வரும் 27 ம் தேதி நடைபெறும் ஆட்டத்துக்கான பயிற்சியில் கலந்து கொள்ளவிருக்கிறார். முன்னதாக உலக கோப்பைக்கு முன் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் காயம் காரணமாக சச்சின் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்