முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் மாநாட்டில் மன்னிப்பு கேட்டார் திக்விஜய்சிங்

புதன்கிழமை, 18 மே 2011      இந்தியா
Image Unavailable

 

வாரணாசி, மே 19 - பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பிறகு அல் கொய்தாவைப் பற்றி மாறுபட்ட கருத்தை தெரிவித்ததை அடுத்து அதற்காக திக்விஜய்சிங் உ.பி. காங்கிரஸ் மாநாட்டில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அல்கொய்தா தலைவர் பின்லேடன் சமீபத்தில் அமெரிக்க அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட சில மணி நேரங்களிலேயே அல்கொய்தாவைப் பற்றி திக்விஜய்சிங் ஒரு கருத்தை வெளிப்படுத்தினார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரு பிரிவினர் கடும் ஆட்சேபணை தெரிவித்தனர். இதனால் உத்தரபிரதேச காங்கிரஸ் விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் சர்ச்சையில் சிக்கினார். நேற்று வாரணாசியில் உ.பி.மாநில காங்கிரஸ் கட்சியின் 2 நாள் மாநாடு துவங்கியது. அப்போது அம்மாநாட்டில் பேசிய திக்விஜய்சிங் அல்கொய்தா இயக்கத்தைப் பற்றி தாம் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததற்கு வருத்தப்படுவதாக கூறி, அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். 

அல்கொய்தா பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட திக்விஜய் சிங் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வாரணாசி காங்கிரசார் சிலர் போர்க்கொடி உயர்த்தி இருந்தனர். உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே உ.பி.யில் அடுத்தபடியாக ஆட்சியை அமைக்கப்போவது காங்கிரஸ் கட்சிதான் என்றும் அவர் கூறினார். வருங்காலத்தில் மத பிரச்சனைகள் ஜாதி பிரச்சனைகள் ஆகியவற்றை நீக்கிவிட்டு நல்ல ஆட்சியை காங்கிரஸ் கட்சி அமைக்கும் என்றும் அவர் கூறினார். மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள காங்கிரஸ் கட்சியைத் தவிர வேறு எந்த கட்சியாலும் முடியாது என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்