முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியா பிரச்சினை - உலகத் தலைவர்களுக்கு ஒபாமா அழைப்பு

வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,பிப்.26 - லிபியாவில் தற்போது நடந்து வரும் கலவரம் குறித்து பிரான்சு, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் ஆலோசிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். 

லிபியாவில் கடாபி ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஆனால் அவர்கள் மீது வன்முறை ஏவப்படுகிறது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரான்சு அதிபர் நிகோலஸ், பிரிட்டிஸ் பிரதமர் டேவிட் காமரூன், இத்தாலி பிரதமர் சில்வியோ ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

லிபியா கலவரம் குறித்து இவர்கள் ஆலோசிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். லிபியாவில் அந்நாட்டு அரசு வன்முறையை பயன்படுத்துகிறது. இது சர்வதேச விதிமுறைகளை மீறுவதாகும். எனவே உலக நாடுகள் இது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்