முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மந்திரிசபை மாற்றத்தில் தி.மு.க. ஒதுக்கித் தள்ளப்பட்டது

புதன்கிழமை, 13 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை 13 - மத்திய மந்திரிசபை நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மாற்றத்தின்போது தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தி.மு.க.வைச் சேர்ந்த எவருக்கும் நேற்றைய மந்திரி சபையின் மாற்றத்தின்போது மந்திரி பதவி கொடுக்கப்படவில்லை. 

ரூ. 1.76 லட்சம் கோடி 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா ஏற்கனவே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து 2004 ம் ஆண்டுமுதல் 2007 ம் ஆண்டுவரை தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறனும் 2 ஜி. ஊழல் விவகாரத்தில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து இவர் தற்போது வகித்து வந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமாவைத் தொடர்ந்து தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று ஹேஷ்யங்கள் வெளியாயின. ஆனால் நேற்றைய மத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது தி.மு.க.வைச் சேர்ந்த யாருக்கும் மத்திய மந்திரி பதவி கொடுக்காமல் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தங்களது கட்சி ஒதுக்கித் தள்ளப்படவில்லை என்றும், மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வுக்கு புதிய மந்திரி பதவி கேட்பது தொடர்பாக வருகிற 23 ம் தேதி கூடும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருப்பதாக கூறப்படுகிறது. மந்திரிசபை மாற்றம் இத்தோடு முடிந்துவிடவில்லை என்றும், மீண்டும் மத்திய மந்திரிசபை மாற்றி அமைக்கப்படலாம் என்றும் அவர் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்