முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவை மீண்டும் தாக்க திட்டமிட்ட பின்லேடன்

வெள்ளிக்கிழமை, 9 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,செப்.9  - அமெரிக்காவை அல்கொய்தா தீவிரவாத இயக்கம் தாக்கிய 10-வது ஆண்டு தினம் இன்று சோகத்துடன் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையொட்டி அமெரிக்காவை மீண்டும் இன்று தாக்க பின்லேடன் திட்டமிட்டிருந்தான் என்று அமெரிக்க உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் இரண்டு விமானங்களை கடத்தி சென்று அமெரிக்காவின் பொருளாதார நகரான நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையமான இரட்டை அடுக்குமாடி கட்டிடத்தை மோதி தகர்த்தனர். தலைநகர் வாஷிங்டன்னிலும் தாக்குதல் நடத்தினர்.  இதில் ஆயிரக்கணக்கான அறிவு ஜீவிகள் பலியானார்கள் மற்றும் உலக பொருளாதாரமே சரிந்தது. இந்த நிலையில் இன்று அமெரிக்காவை தாக்கிய 10-வது ஆண்டு நினைவு தினமாகும். இன்றைய தினத்தில் அமெரிக்காவை மீண்டும் தாக்க பின்லேடன் திட்டமிட்டிருந்தான் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ஜான் பிரினென் நேற்று வாஷிங்டன்னில் தெரிவித்தார். பாகிஸ்தானில் பின்லேடன் பதுங்கி இருந்த வீட்டில் சோதனை நடத்தியபோது கிடைத்த ஆவணங்கள், தஸ்தாவேஜூகள் மற்றும் தடயங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவை மீண்டும் தாக்க பின்லேடன் பலமுறை முயன்றுள்ளான். அதை நாங்கள் தடுத்துவிட்டோம். அமெரிக்காவை தாக்கிய பின்னர் பாதுகாப்பு விஷயத்தில் உச்சகட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். அப்படி இருந்தும் நாங்கள் மிகவும் உஷாராக இருக்கிறோம். அல்கொய்தா மற்றும் அல்ல இதர தீவிரவாத இயக்கங்களும் அமெரிக்காவை தாக்க சதித்திட்டம் தீட்டி வருகின்றன. அந்த விஷயத்திலும் நாங்கள் மிகவும் உஷாராக இருக்கிறோம். தாக்குதலை சமாளிக்கவும் தடுத்து நிறுத்தவும் தயாராகவும் இருக்கிறோம். எங்கள் நாட்டு புலனாய்வு, பாதுகாப்பு, சட்டத்துறையினர் அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருந்து தீவிரவாதிகளை கண்காணித்து வருகிறோம். இந்த உஷார் தொடர்ந்து நீடிக்கும் என்றும் பிரினெனன் மேலும் கூறினார். இந்தியாவில் குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதுவும் பாதுகாப்பு மிகுந்த டெல்லி ஐகோர்ட்டு முன்பு குண்டுவெடித்திருப்பதால் அமெரிக்காவிலும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்