முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி வழக்கில் ப.சிதம்பரத்தையும் சேர்க்கவேண்டும்: சுப்பிரமணியசுவாமி கோர்ட்டில் மனு

வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.- 16 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு வழக்கில் தற்போது மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்கக்கோரி அகில இந்திய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் புதிய மனுத்தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக சுப்பிரமணியசாமி தாக்கல் செய்துள்ள மனுவில் மேலும் கூறியிருப்பதாவது 2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீடு செய்வதில் விலை நிர்ணயம் மற்றும் நுழைவு கட்டணம் ஆகியவற்றை நிர்ணயம் செய்வதில் முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவும் அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் சேர்ந்து முடிவு செய்துள்ளனர். மேலும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக பாராளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடாமல் விற்பது என்ற முடிவு மத்திய அமைச்சரவை எடுத்த முடிவு என்பதும் இதில் முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகிறது. அப்போதைய நிதி அமைச்சர் என்ற முறையில் ப.சிதம்பரத்திற்கும் இதில் தொடர்பு உள்ளது. அதனால் அவரையும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்க வேண்டும். இந்த வழக்கில் என்னையும் சாட்சியாக சேர்க்க வேண்டும். இந்த வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை முழுமையானதாக இல்லை. ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அமைச்சர் ப.சிதம்பரமும் சேர்ந்துதான் முடிவெடுத்தார் என்கிறபோது, அவரது பெயரை விட்டுவிட்டு சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சரியல்ல. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்