முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெட்லி மீதான குற்றப்பத்திரிகை: விசாரணையை தள்ளிவைத்தது கோர்ட்டு

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜன.- 8 - மும்பை தாக்குதல் தொடர்பாக தீவிரவாதி ஹெட்லி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணையை வருகிற 21 ம் தேதிக்கு டெல்லி கோர்ட்டு தள்ளிவைத்தது. மகாராஷ்ட்ர மாநிலம் மும்பையில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவம் உள்பட இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை திட்டமிட்டு அவற்றை அரங்கேற்றியது தொடர்பாக டேவிட் ஹெட்லி மற்றும் 8 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் அடங்கிய விசாரணையை டெல்லி கோர்ட்டு நேற்று வரும் 21 ம் தேதிக்கு தள்ளிவைத்தது. இந்த வழக்கு விசாரணையை 21 ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிமன்றம், அந்த நாளில் இந்த வழக்கு தொடர்பான தேவையான அனைத்து ஆவணங்களையும் கொண்டுவந்து தாக்கல் செய்யுமாறு தேசிய புலனாய்வு அமைப்பின் வழக்கறிஞர் மற்றும் அதன் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டது. மும்பையில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அமெரிக்காவில் இருந்தபோது 51 வயதான ஹெட்லி நியூயார்க்கில்  கைது செய்யப்பட்டார். அவர் மீது கடந்த டிசம்பர் 24 ம் தேதி அன்று தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மேலும் இவரது கனடா கூட்டாளி ராணா மற்றும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சையீது  ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவர்கள் தவிர பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.க்கு  வேலை பார்த்ததாக நம்பப்படும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மேஜர் இக்பால், மேஜர் சமீர் அலி ஆகியோரது பெயர்களும் இந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. இந்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணைதான் தற்போது டெல்லி கோர்ட்டில் 21 ம்தேதிவரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்