முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிக்கன் பால்

Cooking time in minutes: 
20
Ingredients: 

சிக்கன் பால் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. சிக்கன் - 1/2 கிலோ.
  2. முட்டை - 2.
  3. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1.
  4. இஞ்சி,பூண்டு விழுது - 2 ஸ்பூன்.
  5. சோம்பு தூள் - ஒரு ஸ்பூன். 
  6. மிளகு தூள் - ஒரு ஸ்பூன். 
  7. ஆரிகோனா - 2 ஸ்பூன்.
  8. மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.
  9. பிரஸ் கிரீம் - 2 ஸ்பூன்.
  10. பொடியாக நறுக்கிய மல்லி இலை சிறிதளவு.
  11. கார்ன் பிளார் மாவு - 100 கிராம்.
  12. பிரட் கிரம்ஸ் - 100 கிராம்.
  13. எண்ணெய் - 1/2 லிட்டர்.
  14. உப்பு - தேவையான - அளவு.
Method: 

செய்முறை ;--

  1. அடுப்பில் கடாயை  வைத்து  ½ கிலோ போன்லெஸ் சிக்கனை போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி, கடாயை  மூடி போட்டு மூடி 10 நிமிடம் சிக்கனை நன்றாக வேக வைத்து சிறிது நேரம் ஆறவைத்து  சிக்கனை பொடியாக  நறுக்கி  வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாய்யை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்.
  3. எண்ணெய் சூடானவுடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை  நன்றாக போட்டு வதக்கவும்.
  4. இதனுடன் 2 ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.
  5. இதனுடன் தயார் செய்து வைத்துள்ள சிக்கனை போட்டு வதக்கவும்.
  6. இதனுடன் ஒரு ஸ்பூன் சோம்பு தூள்,மிளகு தூள் ஒரு ஸ்பூன்,ஆரிகோனா 2 ஸ்பூன்,மிளகாய் தூள்   2 ஸ்பூன்மற்றும்  தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக போட்டு வதக்கவும்.
  7. இதனுடன் 2 ஸ்பூன் பிரஸ் கிரீம் மற்றும் பொடியாக  நறுக்கிய சிறிதளவு மல்லி இலையை போட்டு வதக்கவும்.
  8. ஒரு பாத்திரத்தில் வதக்கி வைத்த சிக்கனை எடுத்துக்கொள்ளவும்.
  9. இதனுடன் சிறிதளவு பிரஸ் கிரீமை  ஊற்றி நன்றாக கலந்து சிக்கனை சிக்கனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  10. ஒரு பாத்திரத்தில் 100 கிராம் கார்ன் பிளார் மாவை எடுத்து அதில் தயார் செய்து வைத்துள்ள சிக்கன் உருண்டைகளை போட்டு சிக்கன் துண்டின்  எல்லா பக்கங்களிலும் கார்ன் பிளார் மாவு ஒட்டும்படி பிரட்டி எடுத்து  தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  11. ஒரு பாத்திரத்தில் 2 முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  12. ஒரு பாத்திரத்தில்100 கிராம்  பிரட் கிரம்ஸ் எடுத்துக் கொள்ளவும்.
  13. உருட்டி வைத்த உருண்டைகளை கலக்கி வைத்த முட்டையில் முக்கி எடுத்து பிரட் கிரம்ஸ் உள்ள பாத்திரத்தில் போட்டு பிரட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  14. இதே போல் மீதம் உள்ள சிக்கன் உருண்டைகளையும்  தயார் செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  15. அடுப்பில் கடாய்யை வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
  16. எண்ணெய்  சூடானவுடன்  தயார் செய்து வைத்துள்ள சிக்கன் உருண்டைகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
  17. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  18. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  19. சுவையான சிக்கன் பால் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்