முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: 27 முதல் மழை

செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - தென்மேற்கு வங்க கடலில் அந்தமான் அருகே உருவாகி இருந்த மேலடுக்கு சுழற்சி இப்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி உள்ளது.இதன் காரணமாக 27–ந்தேதி முதல் 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.நேற்று அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் 3 செ.மீ மழையும், பாம்பனில் 2 செ.மீ மழையும் பெய்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மெதுவாக நகரும்போது தென்மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உருவாகும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து