முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி - ஷெரிப் மீண்டும் சந்திப்பு

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

காத்மண்டு - காத்மண்டுவில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டி நவாஸ் ஷெரிப் மற்றும் மோடி சந்தித்து கைகுலுக்கிக் கொண்டனர்.
18-வது சார்க் உச்சி மாநாடு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நேற்று (புதன்கிழமை) தொடங்கியது. 2 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் 8 தெற்கு ஆசிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட இருக்கைகளிலிருந்து சற்றே இரண்டு இருக்கைகள் அருகே பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அமர்திருந்தார்.
இருவருக்கும் நடுவே மாலத்தீவு மற்றும் நேபாள நாட்டுத் தலைவர்கள் மட்டுமே இருந்த நிலையிலும் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே கைக்குலுக்கள் போன்ற முறை ரீதியிலான விசாரிப்புகள் எதுவும் நடக்கவில்லை.
மேலும், சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற மாநாட்டில் பேசும் போதும் இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை.
ஆனால் இன்று சார்க் உச்சி மாநாட்டின் இறுதி அமர்வின் போது பிரதமர் நரேந்திர மோடியும், பாக் பிரதமர் நவாஸ் ஷெரிப்பும் ஒருவரை நோக்கி ஒருவர் சிரித்த படியே கைகுலுக்கிக் கொண்டனர்.
இருவரும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். ஆனால் அதிகாரபூர்வ பேச்சு வார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து