முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்பேடு மார்க்கெட்டில் ஒதுக்கீடு செய்த 26 கடைகளின் உரிமம் ரத்து

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - கோயம்போடு மார்க்கெட்டில் முன்னாள் அமைச்சரின் பேரில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 26 கடைகளின் உரி்மத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் இருந்த மொத்த காய்கறிகள் சந்தை கோயம்பேடுக்கு மாற்றப்பட்டது. இதற்காக 3000 கடைகள் மற்றும் கிட்டங்கி அடங்கிய மார்க்கெட்டை சிம்எம்டிஏ கட்டியது.
இந்த மார்க்கெட்டில், கடை ஒதுக்கீடு செய்வதற்கான ஏலம் கடந்த 2009-ஆம் ஆண்டும், 2010- ஆம் ஆண்டுகளில் கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கான கடை ஒதுக்கீடு நடைபெற்றது.
இதில், குறிப்பிட்ட 26 கடைகளை ஒதுக்கித் தரக் கோரி அப்போது நகர மேம்பாடு மற்றும் சென்னை பெருநகர வளச்சிக் குழுமத்தின் தலைவராக இருந்த பரிதி இளம்வழுதியிடம் நேரடியாக மனு அளிக்கப்பட்டது.
அதன் பேரில், தனது விருப்ப ஒதுக்கீட்டின் பேரில் 26 கடைகளை குறிப்பிட்ட சிலருக்கு ஒதுக்கினார். அவ்வாறு ஒதுக்கீடு செய்வதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகளுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
புதிதாக ஏலம் அறிவித்து கடைகளை மறு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த கே.கார்த்திகேயன் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பிறகு திங்கள்கிழமை நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: விருப்ப ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சருக்கு அதிகாரம் இல்லை. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைவரின் பேரில் ஒதுக்கீடு செய்துகொள்ள வழிமுறையும் இல்லை.
அதனால், புதிதாக விளம்பரம் செய்து, மார்ச் 31-ஆம் தேதிக்குள் விதிகளின் படி கடைகளுக்கு புதிதாக ஏலம் விட வேண்டும். இந்தக் கடையை நடந்தி வந்த கடைக்காரர்களுக்கு அவர்கள் செலுத்தியிருந்த வைப்புத் தொகையை 15 நாள்களுக்குள் திருப்பித் தர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து