முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா கண்டித்தாரா? ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 1 பெப்ரவரி 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - காங்கிரஸ் கட்சியில் இருந்து, தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் விலகுவதாக நேற்று முன்தினம் சென்னையில் பேட்டி அளித்தார்.அது குறித்து கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜெயந்தி நடராஜன் கட்சியை விட்டு விலகியதால், இனி காங்கிரஸ் கட்சிக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாகவும், இன்னொருவர் தனது மகனுடன் வெளியேறினால் காங்கிரஸ் கட்சிக்கு விமோசனம் ஏற்படும் என்றும் கருத்து தெரிவித்து இருந்தார்.

அவர் பெயர் குறிப்பிடாமல் ‘இன்னொருவர்’ என்று தெரிவித்தது, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை பற்றித்தான் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்களும் கடும் அதிருப்தி அடைந்தனர்.இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று நிருபருக்கு  பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் கட்சியைவிட்டு விலகுவதாக அறிவித்த நிலையில், நீங்கள் கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டீர்கள். அதுகுறித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி உங்களிடம் டெலிபோனில் தொடர்பு கொண்டு கண்டித்ததாக கூறப்படுகிறதே?.

பதில்:- காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி என்னிடம் பேசியது உண்மை தான். ஆனால், அது குறித்து கேட்கவில்லை. ப.சிதம்பரம் பற்றி அந்த அறிக்கையில் கருத்து எதுவும் தெரிவித்திருந்தீர்களா? என்று தான் கேட்டார். நான் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்று கூறிவிட்டேன். அவ்வளவுதான்.

கேள்வி:- நீங்கள் வெளியிட்ட அறிக்கையில், இன்னொருவர் மகனுடன் கட்சியை விட்டு வெளியேறினால் விமோசனம் கிடைக்கும் என்று தெரிவித்து இருந்தீர்கள். அதை வைத்து பார்க்கும்போது, ப.சிதம்பரத்தையும், அவரது மகனையும் தான் நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்கள் என்று பொதுவான கருத்து நிலவுகிறதே?.

பதில்:- பொதுவாகத்தான் நான் அதை கூறியிருந்தேன். யாருடைய பெயரையும் நான் தெரிவிக்கவில்லையே?.

கேள்வி:- கார்த்தி ப.சிதம்பரம் 30-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்காவிட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தீர்களே?. கெடு தேதியும் முடிந்துவிட்டது. இதுகுறித்து..?.

பதில்:- அவர் அளித்த விளக்கத்தையும் எடுத்துக்கொண்டு  டெல்லி செல்கிறேன். தேர்தல் தொடர்பாக அங்கு நடைபெறும் கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.

இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து