முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆலம் கைதுக்கு எதிர்ப்பு காஷ்மீரில் முழு அடைப்பு

சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர், ஏப் 19:
காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார். காஷ்மீரில் சில நாட்களுக்கு முன் பிரிவினைவாத அமைப்பு தனது ஆதரவாளர்களை திரட்டி பேரணி நடத்தியது. இதில் காஷ்மீர் அரசால் விடுதலை செய்யப்பட்ட பிரிவினைவாத தலைவர் மஸ்ரத் ஆலம் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் நாட்டு கொடியேந்தி வந்தனர். பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களையும் எழுப்பினர். இதையடுத்து பிரிவினைவாத தலைவர் மஸ்ரத் ஆலம் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 7 நாள் காவலில் வைக்கப்பட்டார். பிரிவினைவாத தலைவர் சையத் அலிஷா கிலானி வீட்டு காவலில் வைக்கப்பட்டார். இதற்கிடையே மஸ்ரத் ஆலம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரில் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு பிரிவினைவாத தலைவர் சையத் அலிஷா கிலானி அழைப்பு விடுத்திருந்தார்.

இதையடுத்து நேற்று மாநிலம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஸ்ரீநகர் உள்பட பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாகன போக்குவரத்தும் முடங்கியது. ஜம்முவில் முழு அடைப்புக்கு ஓரளவே ஆதரவு இருந்தது. மஸ்ரத் ஆலம் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஸ்ரீநகரில் நேற்று பல இடங்களில் போராட்டங்கள் நடந்தது.

இதில் கல்வீச்சு உட்பட வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினார்கள். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதற்கிடையே நேற்றும் ஸ்ரீநகரின் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இதனால் ராணுவம் வரவழைக்கப்பட்டது. அவர்கள் போராட்டத்தை ஒடுக்க துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் ஒருவர் பலியானார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து