முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் அனல் காற்று, சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் தவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: சென்னையில் மீண்டும் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
சென்னையில் சில நாட்களாக வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. மதிய வேளைகளில் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. மீண்டும் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரிக்கிறது. சென்னையில் 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்துகிறது. இன்று வெயிலின் தாக்கம் திடீரென உச்சத்தை அடைந்தது.

இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்ச வெயில் கொளுத்துகிறது. வெயில் காரணமாக பொதுமக்கள் பெரிதும் தவித்து வருகின்றனர். வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததால் சாலைகளில் அனல்காற்று வீசுகிறது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள், இரு சக்கரவாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். வறுத்தெடுத்த வெயிலில் புழுக்கத்தால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானார்கள்.

விடுமுறை நாளாக இருந்தபோதிலும் வெயில் காரணமாக பலரால் திட்டமிட்டவாறு வீடுகளை விட்டு வெளியேற முடியவில்லை. இதனால் வீடுகளுக்குள்ளேயே அவர்கள் முடங்கினர்.  வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து இளைப்பாறுவதற்காக பொழுதுபோக்கு பூங்காக்களில் மக்கள் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து