முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் முதல்வர் ஜெயலலிதா: அமைச்சர் பா.வளர்மதி பேச்சு

வெள்ளிக்கிழமை, 17 ஜூலை 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, சென்னை துறைமுகம் பகுதியில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் பா.வளர்மதி கலந்து கொண்டு ஏழை மக்களுக்கு புடவைகள், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். துறைமுகம் பகுதியை சேர்ந்த அண்ணா தி.மு.க. பிரமுகர் துறைமுகம் எம்.பயாஸ் அகமது நோன்பு திறப்பு நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

பிராட்வே முத்துநாயக்கன் தெரு– பி.வி.ஐயர் தெரு சந்திப்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டனர். நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பா.வளர்மதி கலந்து கொண்டு பேசினார்.

இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா செய்துள்ள உதவிகள், சலுகைகளை அமைச்சர் பா.வளர்மதி எடுத்து சொன்னார். சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக அம்மா திகழ்கிறார். அம்மாவுக்கு நீங்கள் என்றொன்றும் ஆதரவு தர வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் நா.பாலகங்கா, பொருளாளர் வி.கிரிநாத், மாவட்ட பேரவை செயலாளர் இம்தியாஸ் எம்.சி., மகளிர் அணி செயலாளர் வேளாங்கண்ணி என்ற கஸ்தூரி, மாணவர் அணி மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.கே.கோபால், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் எம்.இஸ்மாயில்கனி, ஏ.ஆர்.தமீம், எம்.சீமாபஷீர் எம்.சி., ஆவின் அருள், துறைமுகம் ஐ.இன்பநாதன், வசந்தகுமார், எம்.அப்துல்காதர், பேரிஸ் ஹரிப் முகமது, மண்ணடி பொன்வேல், மின்ட் ஒய்.சக்கூர் உட்பட ஏராளமானபேர் கலந்து கொண்டனர்.எம்.முகமது காசிம், முகமது ரசின் ஆகியோர் வரவேற்றார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறைமுகம் எம்.பயாஸ் அகமது சிறப்பாக செய்திருந்தார். அந்த பகுதி முழுவதும் அண்ணா தி.மு.க. கொடி தோரணங்கள், மின்விளக்கு இரட்டை இலை சின்னங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து