முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் டிக்கெட் முன்பதிவு முறை மாற்றம் - திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 6 செப்டம்பர் 2015      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை: திருப்பதியில் சுவாமி தரிசனத்துக் காக சென்னை தியாகராய நகரில் தேவஸ்தான அலுவலகத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையில் திடீரென மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணம் குறித்து தேவஸ்தான அதிகாரி பதிலளித்துள்ளார்.திருப்பதி கோயிலுக்கு செல்ல சென்னை தியாகராயநகரில் உள்ள தேவஸ்தான அலு வலகத்தில்தான் டிக்கெட் முன் பதிவு செய்து வருகிறோம்.

அந்த வகையில், டிக்கெட் முன்பதிவுக்காக சில தினங் களுக்கு முன்பு தியாகராய நகரிலுள்ள தேவஸ்தான அலு வலகத்துக்கு சென்றோம். அப் போது, அடையாள அட்டை இருந்தால்தான் டிக்கெட் முன் பதிவு செய்ய முடியும் என்று தேவஸ்தான அதிகாரிகள் கூறினர். அதனால், டிக்கெட் முன்பதிவு செய்யாமலேயே திரும்பி வந்துவிட்டோம். முன்னறிவிப்பு ஏதுமின்றி இப்படி செய்ய என்ன காரணம் என்று தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.இது தொடர்பாக தேவஸ்தான அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “திருப்பதி சுவாமி தரிசனத்துக்காக தியாகராய நகர் அலுவலகத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டுமென்றால், எத்தனை பேர் திருப்பதி செல்ல உள்ளார்களோ, அத்தனை பேரும் நேரில் வர வேண்டும் என்ற நடைமுறை இதுவரை இருந்தது.

தரிசனத்துக்கு செல்லும் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துவருவது பக்தர்களுக்கு வீண் அலைச் சலும், காலவிரயமும் ஏற்படுவ தாகவும் கூறப்பட்டது. மேலும் தேவஸ்தான அலுவலகத்திலும் கூட்டம் ஏற்பட் டது. இந்நிலையில், அந்த நடைமுறையை தளர்த்தும் பொருட்டு, ஒரு நபர் தனது அடையாள அட்டையுடன் வந்து 5 பேருக்கு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற புதிய முறையை உருவாக்கியுள்ளோம். இது முழுக்க முழுக்க பக்தர்களின் நன்மைக்கானதாகும். இது தொடர்பான அறிவிப்பு களையும் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்