முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி அமைச்சர் கோபால் ராய் ராஜினாமா

செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2016      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, டெல்லி போக்குவரத்து அமைச்சர் கோபால் ராய் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது இலாகா பணிகளை பொதுப்பணித் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கவனிப்பார் எனத்தெரிகிறது.

கோபால் ராய் உடல் நலக் குறைவு காரணமாகவே பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.

ப்ரீமியம் பேருந்து விவகாரம் தொடர்பாக கோபால் ராய் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

ப்ரீமியம் பேருந்து சேவை திட்டம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் விளக்குவதற்காக தானே நேரடியாக லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்துக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) செல்வதாக கோபால் ராய் கூறியிருந்தார். ஆனால், திடீரென அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்