முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப்டம்பர் 2-ல் நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம்: வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

சென்னை  - வங்கிகளை தனியார்மயமாக்கக் கூடாது, பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளை மூடக்கூடாது உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (ஏஐபிஇஏ) சார்பில் வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.  இதுகுறித்து ஏஐபிஇஏ பொதுச் செயலர் சி.ஹெச்.வெங்கடாசலம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பாரத ஸ்டேட் வங்கியின்கீழ் உள்ள 5 துணை வங்கிகளை இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. துணை வங்கிகளை இணைப்பதால் அவற்றின் கிளைகள் பல இடங்களில் மூடப்படும். இதனால், துணை வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களும், வங்கி ஊழியர்களும் பாதிக்கப்படுவர். ரூ.13 லட்சம் கோடி வாராக் கடனை வசூலிக்க கடுமையான சட்டங்களை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.

கடன் வாங்கி திரும்பச் செலுத்தாத பெருமுதலாளிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகள், மக்கள் விரோத தொழிலாளர் நலச் சீர்திருத்தங்கள், தொழிலாளர்கள்-தொழிற்சங்கங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலான நடவடிக்கைகள், ரயில்வே, பாதுகாப்புத் துறை, நிதித்துறை ஆகியவற்றில் வரம்பின்றி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்தது உள்ளிட்டவற்றை கண்டித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சார்பில் வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்.இந்தப் போராட்டத்தில் அரசு, தனியார், கிராமம் -கூட்டுறவு என அனைத்து வங்கிகளைச் சேர்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள், ஊழியர்கள், பணியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்