எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உலகில் முதன் முதலில் மிதி இயக்கி மிதிப்பதன் மூலம் இயங்கும் வகையிலான மிதிவன்டியை கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் என்பவர் வடிவமைத்தார். ஆகையால்தான் இன்று மிதி வண்டியைக் கண்டறிந்தவராக கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் அடையாளப் படுத்தப்படுகிறார். ஸ்காட்லாந்து நகரில் பட்டறை ஒன்றில் கொல்லராக வேலை பார்த்து வந்த இவர் திசைமாற்றி, தடை மற்றும் மிதி இயக்கி ஆகிய அனைத்து பாகங்களும் கொண்ட முழுமையான மிதிவண்டி ஒன்றை 1839-ஆம் ஆண்டு வடிவமைத்தார்.
இதில் பின்புறச்சக்கரம் முன்புறசக்கரத்தைக் காட்டிலும் அளவில் சற்று பெரியதாக இருந்தது. முன் சக்கரத்தோடு திசைமாற்றி, தடை மற்றும் மிதிஇயக்கி ஆகியவை இணைக்கப்பட்டிருந்தது. தையல் இயந்திரத்தில் உள்ள மிதி இயக்கியை போன்று கீழ்நோக்கி அழுத்தும் போது பின்புறச்சக்கரம் முன்னோக்கி இழுக்கப்பட்டு மிதி வண்டி இயங்கியது. அதனை தொடர்ந்து மேம்பட்ட மிதிஇயக்கி தயாரிக்கும் பணியில் எர்னெஸ்ட் மிசாக்ஸ் என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கொல்லர் இறங்கினார். இவரது கடும் உழைப்பின் பயனாக 1863-ஆம் ஆண்டு கிராங்ஸ் மற்றும் பால் பியரிங்க்ஸ் கொண்டு வடிவமைக்கப்பட்ட மிதி இயக்கி ஒன்றைத் தயாரிப்பதில் வெற்றி கொண்டார். முன்புற சக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த இந்த இயக்கியைச் மிதித்துச் சுழற்றும் போது முன்புறச் சக்கரம் முன்நோக்கி தள்ளப்பட்டு மிதிவண்டி இயங்கும்படி வடிவமைக்கப் பட்டிருந்தது.
இதற்கு மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பைக் கண்டு 1868-ஆம் ஆண்டு மிசாக்ஸ் கம்பெனி என்ற பெயரில் மிதிவண்டி நிறுவனம் ஒன்றை துவக்கினார். இது உலகில் முதன் முதலில் வணிக நோக்கில் துவங்கப்பட்ட உலகின் முதல் மிதிவண்டி நிறுவனம் ஆகும். தமிழகப் பேச்சு வழக்கு:சைக்கிள்) மிதிக்கட்டைகளில் கால்களை வைத்து அழுத்தி உந்தப்படும் மனித ஆற்றலால் இயங்கும் ஒரு வண்டி. மிதிவண்டிகளில் ஒன்றன் பின் ஒன்றாக இரு சக்கரங்கள் ஒரே தளத்தில் ஒரு சட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். முன் சக்கரத்தை இடமும் வலமுமாக கையால் திருப்பும் படி அமைப்புள்ள கட்டுப்பாட்டுத் தண்டு இருக்கும். மிதிவண்டிகள் முதன்முதலாக 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமாகின.
தற்பொழுது உலகெங்கும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மிதிவண்டிகள் உள்ளன. உலகின் பல பகுதிகளில், குறிப்பாக சீனாவிலும் நெதர்லாந்திலும் போக்குவரத்திற்கான முதன்மையான வண்டியாக உள்ளது. உந்து ஆற்றலை சக்கரத்துடன் சங்கிலியால் பிணைத்து இயக்கும் தற்போதைய மிதிவண்டிகளின் வடிவத்தை 1885 இல் அடைந்த பிறகு பெரும் மாற்றம் ஏதும் நிகழவில்லை போக்குவரத்து தவிர, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருளாகவும் உடல் உறுதியை காப்பதற்காகவும் பாதுகாவற் பணிப் பயன்பாடுகளுக்காகவும் அஞ்சல் சேவைகளுக்கும் மிதிவண்டி விளையாட்டுக்களுக்கும் மிதிவண்டிகள் பயன்படுகின்றன1970 மற்றும் அதற்கு முன்பு சைக்கிள் வைத்திருந்தால் பணக்காரன்.
அதன் 1980 மற்றும் 1990களில் சைக்கிள் இல்லாத வீடே இல்லை என்ற நிலை வந்தது. அப்போது அங்கொன்று, இங்கொன்றாக பைக் இருந்தது. பின்னர் மொபட் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் கொஞ்ச, கொஞ்சமாக அதனை வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. தற்போது சைக்கிள் அதிகமாக யாரும் பயன்படுத்துவ தில்லை. கோடை விடுமுறை என்றால் சைக்கிள் கடைகளில் ஒரு மணி நேரத்திற்கு வாடகைக்கு எடுத்து வந்த சைக்கிள் பயின்றனர் அப்போதைய பள்ளி மாணவ, மாணவிகள். இப்போதோ கம்ப்யூட்டர் கேம்ஸ், கிரிக்கெட் என பள்ளி மாணவர்கள் தங்களது வட்டத்தை சிறிதாக்கி கொண்டனர்சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும்
சைக்கிள் ஓட்டுவதால் பொன்னான நன்மைகள்…
சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் பொன்னான நன்மைகள்…சைக்கிள் ஓட்டுவதற்கு முன்பாக, மிதமான உணவையும் குடிநீரையும் எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு மற்றும் தண்ணீர் அதிகமானால், வேகமாக சைக்கிள் ஓட்டும் போது வாந்தி வரவும் வாய்ப்பு உண்டு.முதலில் மெதுவாகத் தொடங்கி, மிதமாக, வேகமாக, மிக வேகமாக என படிப்படியாகத்தான் சைக்கிளின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். சராசரியாக, மணிக்கு 20-25 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டுவது சிறந்தது. காலை மற்றும் மாலை நேரங்களில் சைக்கிள் பயிற்சி செய்வது சிறந்தது. ஏனெனில், நண் பகல் நேரத்தில் பயிற்சி மேற்கொள்ளும் போது, அதிக வெப்பநிலை காரணமாக, உடல்எளிதில் சோர்வடைந்து விடும்.
இதயத்துடிப்பை அதிகப்படுத்தி, இதயத்தை வலுப்படுத்தவும், எலும்பு மற்றும் மூட்டுகளை வலுவாக்கவும், தசைகளை வலிமைப்படுத்தவும் சைக்கிளிங் உதவுகிறது. கையுறைகள் அணிந்து சைக்கிள் ஓட்டுவதால், மேல் உடலின் அனைத்து எடையையும் உள்ளங்கையில் சமன் செய்ய உதவும். தளர்வான உடைகள், தரமான காலணிகளை அணிந்து கொண்டு சைக்கிள் பயிற்சி செய்ய வேண்டும்.போக்குவரத்து நெரிசல் குறைவான, இயற்கைச் சூழல்கொண்ட இடத்தைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. இதன் மூலம் விபத்துகள் மற்றும் உடல் மாசு ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம்.ஓய்வு நேரங்களில் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்ளலாம்.
இதன்மூலம் புதிய இடங்களையும் இயற்கைக் காட்சிகளையும் ரசிக்கும் வாய்ப்பும் அனுபவமும் கிடைக்கும்.சிறு வயது முதலே சைக்கிளிங் செய்வதால், உடல் பருமன் ஏற்படுவதைத் தடுக்கலாம். நாம் சாப்பிட்ட உணவுப் பொருட்களில் இருக்கும் அதிகமான கலோரிகளை எரிக்கும் திறன், சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கிறது.முன்பாதத்தால் மிதித்துதான் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், கால் தசைகள் கூடுதல் பலம் பெறும். தினமும் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டுவதால், கை, கால் தசைகள் உறுதி பெறும்.
உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக வைக்கவும், ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களைக் கட்டுக்குள் வைக்கவும். உடல் வெப்பத்தையும் வியர்வையையும் வெளியேற்ற சைக்கிள் பயிற்சி உதவுகிறது.நம்மால் முடிந்த அளவிலான தூரத்துக்குச்செல்ல எப்போதும் சைக்கிளையே பயன்படுத்தினால், சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய நன்மை கிடைக்கும். அவசர உலகில், சொகுசாக காரிலும், பைக்கிலும் செல்லும் போது, உடல் தசை நரம்புகள் செயல்பாடின்றி இருக்கிறது.
ஆகையால், தினமும், காலையில், 20 நிமிடம் சைக்கிள் பயணம் மேற் கொள்ளும் போது, உடற்பயிற்சிக்கு ஈடாக அமையும். இதனால், கை, கால் தசை நரம்புகள் இறுக்கத்தை போக்கி, இலகுவான தேகத்தை தரும். உடலின் அனைத்து பாகங்களும் இயங்கும் உடற்பயிற்சி, நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுவது தான். இதனால் சுறுசுறுப்புடன் அன்றைய நாளின் செயலை முடிக்க உதவும்.
காலையில் எழுந்து, இரண்டு கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டுவது, 10 கி.மீ., தூரம் ஓடுவதற்கு சமம். உடம்பில் இருக்கும் கெட்ட தண்ணீரை வியர்வையாக வெளியேற்ற உதவும் ஒரே உடற்பயிற்சியும் சைக்கிள் ஓட்டுவது தான். சைக்கிள் ஓட்டுவதன் முக்கியத்துவத்தை அறிந்து தான், நமது பக்கத்து நாடான சீனாவில், அலுவலகம் செல்லும் பலர் சைக்கிளில் செல்கின்றனர். சைக்கிள் செல்வதற்கென அங்கு பிரத்யேக ரோடும் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
செங்கோட்டையன் தலைமையில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
18 Apr 2025கோபி : அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சை கண்டித்து செங்கோட்டையன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
கூட்டணி குறித்த கேள்வி: ஓ.பன்னீர் செல்வம் பதில்
18 Apr 2025கோவை : கூட்டணி குறித்த கேள்விக்கு இன்று லீவு என ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்தார்.
-
அமித்ஷா அல்ல எந்த ஷாவாக இருந்தாலும் இங்கே ஆள முடியாது: முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
18 Apr 2025சென்னை, நாங்கள்இந்த உருட்டல், மிரட்டல்களுக்க எல்லாம் அடிபணிகின்ற அடிமைகள்அல்ல. அமித்ஷா அல்ல – எந்த ஷா-வாக இருந்தாலும் இங்கே ஆளமுடியாது.
-
பெலிஸ் நாட்டில் சிறிய ரக விமானத்தை கடத்த முயன்றவர் சுட்டுக்கொலை
18 Apr 2025அமெரிக்கா : பெலிஸ் நாட்டில் சிறிய ரக விமானத்தை கடத்த முயன்றவர் சக பயணியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
சீனாவுக்கு இனியும் வரியை அதிகமாக்க விரும்பவில்லை: அதிபர் ட்ரம்ப் திடீர் முடிவு
18 Apr 2025வாஷிங்டன், சீனா மீதான வரிவிதிப்பு நடவடிக்கை முடிவுக்கு வரக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி ஆளுகைக்கு தமிழகம் என்றைக்குமே அடிபணியாது: திருவள்ளூர் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
18 Apr 2025சென்னை, டெல்லி ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்கும் அடிபணியாது. மற்ற மாநிலங்களைப் போல ரெய்டுகளால், கட்சிகளை உடைக்கும் உங்கள் பார்முலா தமிழகத்தில் நடக்காது.
-
திருவள்ளூரில் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
18 Apr 2025திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கூவம் ஆற்றின் குறுக்கே 20 கோடியே 37 இலட்சம் ரூப
-
ப்ளோரிடா பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 2 பலி; 6 பேர் காயம்
18 Apr 2025ப்ளோரிடா : அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர்.
-
யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு ஜி.எஸ்.டி. வரியா..? - மத்திய அரசு விளக்கம்
18 Apr 2025புதுடெல்லி : யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் எந்த ஒரு திட்டமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
சென்னை விமான நிலையத்துக்குள் பஸ்கள் சென்று வர விரைவில் ஏற்பாடு
18 Apr 2025ஆலந்தூர் : சென்னை விமான நிலையத்துக்குள் பஸ்கள் சென்று வர விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என மாநகர போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
கொலம்பியாவில் சுகாதார அவசர நிலை: மஞ்சள் காய்ச்சலுக்கு 34 பேர் பலி
18 Apr 2025பொகாடா : தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சலால் 34 பேர் இறந்ததை அடுத்து, நாடு தழுவிய சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பவன் கல்யாண் மீது ரோஜா தாக்கு
18 Apr 2025திருப்பதி : பவன் கல்யாண் மீது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ரோஜா பாய்ச்சல்.
-
என்.ஐ.ஏ.வால் தேடப்படும் பயங்கரவாதி அமெரிக்காவில் கைது
18 Apr 2025புதுடெல்லி : பஞ்சாபில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியான ஹேப்பி பாசியாவை அமெரிக்க போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தன
-
ஜி.பி.எஸ். முறையில் சுங்கக்கட்டணம் வசூலிப்பா..? மத்திய அரசு விளக்கம்
18 Apr 2025புதுடில்லி, மே 1 முதல் ஜி.பி.எஸ். முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பரவும் தகவல் உண்மையல்ல என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நீரஜ் சோப்ரா முதலிடம்
18 Apr 2025தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் போட்ச் இன்விடேஷனல் தடகள போட்டி நடைபெற்றது.
-
நடிகர் ஸ்ரீ குறித்து அவதூறு: குடும்பத்தினர் வேண்டுகோள்
18 Apr 2025சென்னை : நடிகர் ஸ்ரீ குறித்து அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
காயத்தால் குர்ஜப்னீத் சிங் விலகல்: பிரவீசை ஒப்பந்தம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
18 Apr 2025சென்னை : சி.எஸ்.கே.
-
விரைவில் தமிழ் வழி மருத்துவக் கல்வி: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
18 Apr 2025சென்னை : தமிழகத்தில் மருத்துவ பாடத்திற்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
18 Apr 2025சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கி உள்ளது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
18 Apr 2025சென்னை : சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கி உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பிணைக்கைதிகளை விடுவிக்க தயார் : ஹமாஸ் தலைவர் திடீர் அறிவிப்பு
18 Apr 2025கெய்ரோ : பிணைக்கைதிகளை விடுவிக்க தயார் என்று ஹமாஸ் தலைவர் அறிவித்துள்ளார்.
-
ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பதற்கான நேரம் வந்துவிட்டது: வீரேந்திர சேவாக்
18 Apr 2025மும்பை : ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பதற்கான நேரம் ஏற்கனவே வந்துவிட்டது என இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் சேவாக் கூறியுள்ளார்.
-
ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்த முயற்சியை கைவிடுகிறது அமெரிக்கா?
18 Apr 2025பாரிஸ் : ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு தெளிவாக தெரியாவிட்டால் அடுத்த சில நாட்களில், இதற்கான மத்தியஸ்த முயற்சியில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால
-
வரத்து குறைவால் எலுமிச்சை கிலோ ரூ.170-க்கு விற்பனை
18 Apr 2025சென்னை : கோடை வெயில் அதிகரிப்பு காரணமாகவும், வரத்து குறைவு காரணமாகவும் எலுமிச்சை கிலோ ரூ.170-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதல்: 38 பேர் பலி
18 Apr 2025சனா : இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வரும் நிலையில், ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 38 பேர் பலியானார்கள்.