முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புலிகள் மீதான தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்: தமிழர் அமைப்பு வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      உலகம்
Image Unavailable

 வாஷிங்டன்  - விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் தமிழர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.  ‘அதிபர் ஒபாமாவை ஆதரிக் கும் தமிழர்கள்’ என்ற அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுன் தவறான கொள்கையால் இலங்கை இறுதிக்கட்டப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பலியாகினர். 2009-ம் ஆண்டுக்குப் பிறகு விடுதலைப் புலிகள் அமைப்பு செயல்படவில்லை. எனினும் புலிகள் அமைப்பு மீது அமெரிக்கா விதித்துள்ள தடை நீடிப்பதால் அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு அமெரிக்கா திரும்பும்போது விசாரணை என்ற பெயரில் விமான நிலையங்களில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

தடையை நீக்க வேண்டும்:.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நிலை நீதிமன்றம், விடு தலைப் புலிகள் மீதான தடையை நீக்க கடந்த செப்டம்பரில் உத்தரவிட்டது. இதேபோன்ற நடவடிக்கையை அமெரிக்க அரசும் மேற்கொள்ள வேண்டும். கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். இதன்மூலம் தமிழர்கள் எதிர் கொள்ளும் சிரமங்கள் குறையும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்