முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரொக்கமில்லா பரிவர்த்தனை-விழிப்புணர்வு விளக்கம்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நேற்று மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

அப்போது மாவட்ட ஆட்சி தலைவரின் ஆலோசனையின் பேரில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பாக ரொக்கமில்லா பரிவர்த்தனை பற்றிய விழிப்புணர்வு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் கைப்பேசி செயலிகள் மூலமாக மேற்கொள்ளப்படும் பல்வேறு வங்கி பரிவர்த்தனைகளை செயல் முறை விளக்கமாக செய்து காட்டப்பட்டது.

 

மேலும் இத்திட்டதினை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டும், ரொக்கமில்லா பரிவர்த்தனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் வட்டார அளவிலான அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம் முகாமில் பயிற்சி பெற்றவர்கள் அனைவரும் அனைத்து கிராம மக்களுக்கும் இதனை கொண்டு சேர்க்கவும் பெரும்பாலான மக்களை ரொக்கமில்லா பரிவர்த்தனையை மேற்க்கொள்ள ஊக்குவிப்பார்கள்.

 

அனைத்து துறை அலுவர்களும் தங்களுடைய களப்பணியாளர்களை மேற்படி முகாமில் கலந்து கொள்ளவும், பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொண்டார்கள்.

 

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சவுரிராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹெப்சூர் ரஹ்மான், இந்தியன் வங்கியின் மார்க்கெட்டிங் அலுவலர் ஆதித்யா மற்றும் கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்