முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியாவில் வான்வழித் தாக்குதல்: ஐ.எஸ் தீவிரவாதிகள் 80 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் - லிபியாவில் அமெரிக்க படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த 80 பேர் கொல்லப்பட்டனர்.  ஐ.எஸ் இயக்கத்துக்கு எதிராக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் குறித்து, அமெரிக்க ராணுவ தளமான பெண்டகனின் அதிகாரிகள் கூறியபோது,

"லிபியாவில் ஐஎஸ் இயக்கத்தின் கோட்டை சிர்ட்டே நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாமில் அமெரிக்க படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாதிகள் 80 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தப்பட்ட முகாம்களில் குழந்தைகள், பெண்கள் என்று யாரும் இல்லை" என்று கூறினார். இந்த தாக்குதலில் ஐரோப்பிய தாக்குதலில் ஈடுபட்ட ஐ.எஸ் இயக்கத்தினர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்