முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் முதன்முறையாக மாணவர்களுக்கான கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்

புதன்கிழமை, 1 மார்ச் 2017      திருவண்ணாமலை

தேர்வு குறித்து மாணவர்களின் மனஅழுத்தம் மற்றும் அச்சத்தை தவிர்ப்பதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் திருவண்ணாமலை மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவடட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று (2ந் தேதி) தொடங்குகிறது. தேர்வு அறைக்குள் காலை 9.45 மணிக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அப்போது முதல் மணி அடிக்கப்படும் 9.55 மணிக்கு 2வது மணி அடிக்கும்போது வினாத்தாள்களின் உரையை அறைக்கண்காணிப்பாளர்கள் பிரிக்க வேண்டும். 10 மணிக்கு 3வதுமணி அடிக்கும்போது மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும். 10.10 மணிக்கு 4வது மணி அடிக்கும்போது மாணவர்களுக்கு விடைத்தாள் வழங்கப்படும். 10.15 மணிக்கு 5வதுமணி அடிக்கும்போது «த்வு தொடங்கும். அதன்பிறகு ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் மணி அடிக்கப்படும். இந்த ஆண்டு இரண்டு நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தேர்வு முடிந்தபிறகு மாணவர்களிடமிருந்து பெறப்படும் விடைத்தாள்களை ஓர் உறையில் போட்டு ஒட்ட வேண்டும். இதுவரை உறையின் மேல்பகுதியில் மட்டும் அறைக்கண்காணிப்பாளரிடம் கையப்பமிட்டு செல்லோ டேப் ஒட்டப்படும். இந்த முறை உறையின் மேல்பகுதி மற்றும் கீழ்பகுதியில் கையப்பமிட்டு இரு இடங்களிலும் செல்லோ டேப் ஒட்டி ஒப்படைக்க வேண்டும். மேலும் மாணவர்களின் நலன்கருதி இலவச தொலைபேசி எண் இன்று முதல் செயல்படும் 18001217030 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம். அந்த எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க எண் ஒன்றையும், கருத்து தெரிவிக்க எண் இரண்டையும் அழுத்தி பதிவு செய்ய வேண்டும். இதன்மூலம் தேர்வின் மாணவர்களுககு ஏற்படும் மனஅழுத்தம் தொடர்பாக ஆலோசனைகளை பெறலாம் இந்த எண்ணை பெற்றோர் அல்லது பொதுமக்களும் பயன்படுத்தலாம் அவர்களது புகார்களும் கருத்துகளும் ஏற்கப்படும். தேர்வு முடிந்தபிறகும் கட்டணமில்லா தொலைபேசி எண் தொடர்ந்து செயல்படும் பள்ளியில் உள்ள அடிப்படை தேவைகள், பாடங்கள் வாரியாக விளக்கம் பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் அரசின நலத்திட்ட உதவிகளின் விவரங்கள் கல்வி உதவித்தொகை வழங்கல் போன்ற அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் முதன்முறையாக கட்டணமில்லா தொலைபேசி அறிமுகம் செய்யப்படுகிறது என்றார்

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்