முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்டத்தில் தடகள விளையாட்டிற்கான தேர்வுப் போட்டிகள் வருகிற 6ம் தேதி நடக்கிறது : மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணிய ராஜா தகவல்

வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017      பெரம்பலூர்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் புதியதாக துவங்கி உள்ள (வுயடநவெ ர்ரவெiபெ ளுஉhநஅந)இ திட்டத்தின்கீழ் தேர்வாகும் 14 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் தடகள பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

 

தடகள போட்டி

 

இத்திட்டத்தின் கீழ் 10 சிறுவர்கள், 10 சிறுமியர் என மொத்தம் 20 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் சிறுவர்,சிறுமியர்களுக்கு ஆண்டு முழுவதும் தினமும் மாவட்ட விளையாட்டரங்கில் தடகள பயிற்றுநரால் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தினந்தோறும் பயிற்சியின்போது சத்தான உணவு, பயணப்படி மற்றும் சீருடை ஆகியவை வழங்கப்பட உள்ளது.

சிறப்பாக விளையாடும் சிறுவர், சிறுமியர்கள் அடுத்த கட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். சாதனை புரியும் சிறுவர், சிறுமியர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதி மற்றும் அகாடமிகளில் சேர்த்துக்கொள்ளபட்டு, அவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதற்கான விளையாட்டுத் தேர்வுப் போட்டிகள் 06.03.2017 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. மாணவ, மாணவியர்களை தங்கள் திறமைகளை மேம்படுத்தி சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவில் பல பதக்கங்களை வெல்லவும், சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில் பயிற்சியளிக்கப்பட உள்ளது.

தேர்வுப் போட்டிகளுக்கு வரும் சிறுவர், சிறுமியர்கள் பள்ளிக் கல்விச் சான்று, ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த சிறுவர், சிறுமியர்கள் தேர்வுப்; போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்