முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் புகழ்பெற்ற கிர் வனப்பகுதியில் புதிதாக வருகை தந்துள்ள வெள்ளை நிற மான்கள்

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

காந்திநகர்  - குஜராத்தில் மாநிலத்தில், புகழ்பெற்ற கிர் வனப்பகுதியில் புதிதாக வருகை  தந்துள்ள வெள்ளை நிற மான்களை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர். குஜராத் மாநிலம், ஜூனாகர் மாவட்டத்தில் ஆசிய சிங்கங்களுக்கு புகழ் பெற்ற கிர்  வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வன விலங்குகள் காணப்படுகின்றன. இதனைக் கண்டுகளிக்க தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், கிர் வனப்பகுதியில் புதிய வரவான அல்பினோ ரகத்தை சேர்ந்த 2 வெள்ளை நிற மான்கள் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்துவருகிறது. அங்கும் இங்கும் துள்ளி ஓடும் மான்கள் பொதுமக்களின் கண்களுக்கு விருந்தளிப்பதாக அமைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்