முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2020-ல் உலகின் மிக இளமையான நாடாக இந்தியா இருக்கும் : இலங்கைக்கான இந்திய தூதர் பேச்சு

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

கொழும்பு  - 2020-ம் ஆண்டில் உலகின் மிக இளையோர்களை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என இலங்கைக்கான இந்திய தூதர் டரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.

கருத்தரங்கு
இலங்கை தலைநகர் கொழும்புவில் வெளிநாட்டு உறவுகளுக்கான கருத்தரங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் தூதர்கள் பங்கேற்றனர். இலங்கைக்கான இந்திய தூதர் டரஞ்சித் சிங் இந்தியா சார்பில் கலந்து கொண்டார். அப்போது, 2020-ம் ஆண்டில் இந்தியா உலகின் மிக இளையோர்களை கொண்ட நாடாக இருக்கும் எனவும்,  சராசரியாக ஒவ்வொரு இந்தியருக்கும் அப்போது 29 வயது இருக்கும் மற்றும் பணிக்கு செல்பவர்களின் வயது கொண்டவர்களின் சராசரி 69% ஆக இருக்கும் என தெரிவித்தார்.

உறவு வளர்ச்சியடையும்
மேலும், சீனா, ஜப்பான்,தென் கொரியா,அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா அதிக மக்கள் தொகையை கொண்டிருப்பதால், ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அது உதவியாக உள்ளதாகவும், மற்ற நாடுகளிடம் இந்தியா கொண்டுள்ள தூதரக உறவு வளர்ச்சிக்கானதாக இருக்கும் எனவும் டரஞ்சித் பேசினார். சார்க் நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் இலங்கை ஒத்துழைப்புடன் வானிலை நிலவரங்களை அறியக்கூடிய செயற்கைக் கோள்களை இந்தியா விரைவில் விண்ணில் செலுத்தும் எனவும் டரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்