முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணா கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்கள் அறிவியல் கருத்தரங்கம்

வியாழக்கிழமை, 6 ஏப்ரல் 2017      வேலூர்
Image Unavailable

ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின்; அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது. வேலூர் மாவட்டம், அரக்கோணம் டவுன் எல்லை திருத்தணி தேசிய நெடுஞ்சாலை அமைந்து உள்ளது. இந்த கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் விண்வெளியில் நமது முகவரி, தொலை நோக்கி மூலம் வான் நோக்கு நிகழ்வு என்கிற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. மாநில கருத்தாய்வாளர் வேலூர் விசுவநாதன் செயல் மற்றும் திரைப்பட காட்சிகளுடன் விளக்கம் அளித்தார். முன்னதாக தொடக்க விழாவிற்கு கல்லூரி இயக்குனர் சாம்பமூர்த்தி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் முத்துகிருஷ்ணன் வரவேற்று பேசினார். திருத்தணி அரசு கல்லூரி பேராசிரியர் முனைவர் அ.கலைநேசன் நிகழ்வினை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்வுகள் இடையே இளம் பெண் விஞ்ஞானிக்கு கல்லூரி சேர்மன் டிஆர்எஸ்.சுப்பிரமணி நினைவு பரிசினை வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்வில் கல்லூரி அலுவல உதவியாளர் கோபிநாத். அரசு பெண்கள் பள்ளி அறிவியல் பாட ஆசிரியர்களான சதீஷ்குமார், மைதிலி, ஆதி திராவிடர் நல பள்ளி சார்பில் பாக்கியலட்சுமி, அலமேலு, மற்றும் இச்சிபுத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணகி, ஆசிரியர் துளசிராமன் ஆகியோருடன் ஒன்றிய தலைவர் ஆசிரியர் வேல்குமார், தர்மன், உள்ளிட்டவர்களும்; கலந்து கொண்டனர் கல்லூரி உதவி அலுவலர் வீரமணி இறுதியில் நன்றி கூறினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்