முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி. வரியை எதிர்த்து திருப்பதியில் போராட்டம்

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

திருப்பதி, மத்திய அரசு வரும் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த உள்ளது. இந்நிலையில், திருமலைக்கு வரும் பக்தர்களுக் கும், தேவஸ்தானத்துக்கும் ஜிஎஸ்டி வரியில் இருந்து பூரண விலக்கு அளிக்கும்படி ஆந்திர அரசு சார்பில் மத்திய அரசுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருப்பதி கோயிலுக்கு ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்யக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ராயல சீமா போராட்ட சமிதி அறிவித்துள்ளது. இதுகுறித்து சமிதியின் ஒருங்கிணைப்பாளர் நவீன் குமார் ரெட்டி நேற்று கூறியதாவது:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜிஎஸ்டி வரியால் பல இந்து கோயில்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருப்பதியில் பக்தர்களுக்காக வழங்கப்பட்டு வரும் அன்னதான திட்டம் பாதிக்கப்படும்.

ஒரு லட்டு ரூ.50-க்கு விற்கப்படும் சூழல் உருவாகும். எனவே, அனைத்து இந்து கோயில்களுக்கும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி திருப்பதி மலையடிவாரத்தில் தொடர் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு நவீன் குமார் ரெட்டி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து