முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கிய கடனில் ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை - எதிர்க்கட்சிகளுக்கு அருண் ஜெட்லி பதிலடி

வெள்ளிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிகளிலிருந்து வாங்கிய கடன் தொகையில் ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படவில்லை, எதிர்க்கட்சிகள் முதலில் தரவுகளைச் சரிபார்த்து விட்டு பிறகு பேசட்டும் என்று அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

திட்டம் இல்லை

நாடாளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வங்கிகளில் பெற்ற கடன்களில் தள்ளுபடி செய்வது என்பது வங்கிகளின் வணிக ரீதியான முடிவாகும், மேலும் 2014 முதல் மத்திய அரசிடம் விவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறினார். நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்குப் பதில் அளித்த அருண் ஜெட்லி, கார்ப்பரேட்களின் கடன்களில் ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை. இது பற்றி கருத்து தெரிவிக்கும் முன்னர் தரவுகளைச் சரிபார்க்க வேண்டும். காங்கிரஸ் உறுப்பினர் தீபேந்தர் சிங் ஹூடா, மத்திய அரசு கார்ப்பரேட் கடன்களைத் தள்ளுபடி செய்தது, ஆனால் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை என்று குற்றம்சாட்டியதற்கு அருண் ஜெட்லி இவ்வாறு பதில் அளித்தார்.

விவசாயக் கடன் அளவு...

நடப்பு ஆண்டு மார்ச் இறுதியில் வேளாண் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளின் மொத்தமான செயலில் இல்லாத சொத்துக்கள் மதிப்பு ரூ.52,307 கோடி என்று அருண் ஜெட்லி எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். இது மார்ச் 31, 2016 முடிவில் ரூ.51,964 கோடியாக இருந்தது. மேலும் ஜெட்லி கூறும்போது, தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயக் கடன் அளவு குறித்த தகவல்களை மத்திய அரசு பராமரிப்பதில்லை என்றும் விவசாயம் மற்றும் கிராமப்புறத் துறைகளுக்காக இந்த நிதியாண்டில் அரசு முதலீடு செய்யவுள்ள தொகை ரூ.2.92 லட்சம் கோடியாகும் இது ஒரு சாதனையான முதலீடாகும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து