முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனுஷ்கோடி,பாம்பன் சாலைப்பாலம்,அக்னிதீர்த்தம் கடற்கரைப்பகுதிகளில் நீதிபதிகள் குழு ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,-  மதுரை உயர் நீதிமன்ற கிளையின் நீதிபதிகள் குழு பாம்பன் சாலைப்பாலம், ராமேசுவரம் திருக்கோயில், அக்னிதீர்த்தம் கடற்கரைப்பகுதிகள் தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து நேற்று ஆய்வு நடத்தி அதிகாரிகளுடன் ஆலோசணை நடைபெற்றது.
 ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில் அமைக்கப்ப்ட்டுள்ள சாலைப்பாலத்தில் சில நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட ரப்பர் சாலையால் அடிக்கடி வாகனங்கள் விபத்து ஏற்பட்டு உயிர்சேதங்கள் ஏற்பட்டு வந்தது.அதுபோல ராமேசுவரம் திருக்கோயிலுக்கும் வரும் பக்தர்களுக்கு சுகாதாரம் உள்பட அடிப்படை வசதிகள் மற்றும் பக்தர்கள் புனித தீர்த்தம் நீராடா வாங்கப்படும் கூடுதல் கட்டணம்.தீர்த்தம் இறைத்து ஊற்றும் முறைகளில் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது.அதுபோல பக்தர்கள் புனித தீர்த்தமாக நினைத்து நீராடும்  அக்னி தீர்த்தம் கடலில் ஏற்பட்டுள்ள சுகாதாரம் குறைவு அதிகமாக காணப்பட்டது.அதுபோல புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதியை பார்வையிட வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கும்,அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களின்  பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளில்  குறைபாடுகள் இருந்து வந்தது. இந்த நான்கு பிரச்சினைகளும் குறித்து பக்தர்கள் மற்றும் சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அழுகுமணி,திருமுருகன் ஆகிய வழக்குரைஞர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடங்கினார்கள்.இந்த நிலையில் இவ்வழக்கு நடைபெற்ற வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நீதிமன்ற  தனி பெஞ்சில் விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.அதன் பேரில்  இவ்வழுக்கு  நடைபெற்று வரும்  தனி பெஞ்சு நீதிபதிகள் சசிதரன்,சுவாமிநாதன்,நிஷாபானு ஆகியோர்கள் அடங்கிய குழு ராமேசுவரம் பகுதிக்கு நேற்று வருகை தந்தனர். அதன் பின்னர் இவர்கள் பாம்பன் சாலைப்பாலத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ரப்பர் சாலையின் தன்மைகள் குறித்தும்,கோவிலில் அமைந்துள்ள புனித தீர்த்தம் குறித்தும்,அக்னிதீர்த்தம் கடல் பகுதியில் சுகாதாரம் குறித்தும்,தனுஷ்கோடி பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டனர்.பின்னர் இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன்,திருக்கோயில் உதவிக்கோட்டபொறியாளர் மயில்வாகணன்,நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜயப்பன் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்பட துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசணை நடைபெற்றது.இந்த ஆய்வில் அரசு வழக்குரைஞர் கோவிந்தன்,அறநிலையத்துறை வழக்குரைஞர் ரமேஷ் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா,டி.ஆர்.ஓ,முத்துமாரி,ஆர்,டி,ஓ,பேபி உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து