முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யாரையும் சந்தித்து பேச வேண்டியதில்லை: காவிரி விவகாரத்தில் நமக்கு நிச்சயம் நல்ல தீர்ப்பு கிடைக்கும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சனிக்கிழமை, 12 மே 2018      தமிழகம்
Image Unavailable

சேலம் : காவிரி விவகாரத்தில் நாம் யாரையும் சந்தித்து பேசவேண்யதில்லை, நிச்சயம் நமக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று ஏற்காட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கோடை விழா

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 43-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சியை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளி்த்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அதன் விபரம் வருமாறு:-

கேள்வி: இன்று உங்கள் பிறந்த நாள். பிறந்த நாள் செய்தியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: இன்று எனது பிறந்த நாள். அம்மா வழியில் செயல்படும் அரசு விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பதே எனது லட்சியம்.

கேள்வி: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12-ம் தேதி திறக்கப்படுமா ?

பதில்: போதிய அளவு தண்ணீர் இல்லாத காரணத்தால் நடப்பு ஆண்டில் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கமுடியாத சூழல் உள்ளது. தற்போது பருவமழை நன்றாக பெய்கிறது. அணைகள் நிரம்பும், விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கேள்வி: கர்நாடகாவில் தேர்தல் முடிந்துவிட்டது...காவிரி நீர் திறப்பு குறித்து கர்நாடக முதலமைச்சரை சந்தித்து பேசும் வாய்ப்புள்ளதா ?

பதில்: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு இறுதி தீர்ப்பை அடையும் நிலைக்கு வந்துள்ளோம். நிச்சயம் நல்ல தீர்ப்பு நமக்கு கிடைக்கும். எனவே யாரையும் சந்தித்து பேசவேண்டியதில்லை.

கேள்வி: தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுகிறதே ?

பதில்: கனிமவளம் கொள்ளையடிப்பதை தடுக்க கடுமையான சட்டம் இயற்றி அரசே மணல் எடுத்து விற்பனை செய்து வருகிறது.

கேள்வி: சேலம்-சென்னை பசுமை வெளிசாலைக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதே?

பதில்: சேலம் மாவட்டத்தில் உட்கட்டமைப்பை மேம்படுத்தவே பசுமை வழிச்சாலை அமைக்கப்படுகிறது. பொருளாதாரத்தில் மேம்பட இத்திட்டத்தை வரவேற்க வேண்டும். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து