முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர், பீகார் உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,7 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

பிகார், சிக்கிம், ஹரியாணா, மேகாலயா, திரிபுரா, ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட் உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நேற்று நியமிக்கப்பட்டனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

பீகார் கவர்னராக இருந்த சத்யபால் மாலிக், ஜம்மு-காஷ்மீர் கவர்னராக நியமிக்கப்பட்டார்.

பீகார் மாநிலத்துக்கு புதிய கவர்னராக லால்ஜி தாண்டன் நியமிக்கப்பட்டார்.

ஹரியாணா மாநிலத்துக்கு சத்யதேவ் நாராயண் ஆர்யா,

உத்தரகண்ட் மாநிலத்துக்கு பேபி ராணி மௌரியா,

சிக்கிம் மாநிலத்துக்கு கங்கா பிரசாத்,

மேகாலயா மாநிலத்துக்கு தத்தகட்டா ராய் மற்றும்

திரிபுரா மாநிலத்துக்கு கப்தன் சிங் சோலாங்கி ஆகியோர் புதிய கவர்னர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து