முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு நாள் ஆஸி. தூதரானார் ஜார்க்கண்ட் இளம்பெண்

சனிக்கிழமை, 3 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ராஞ்சி,ஜாம்ஷெட்பூரின் நக்சல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட கிராமத்தில் இருந்து 22 வயது இளம் பெண் பாரி, ஆஸ்திரேலிய தூதரகத்தின் தலைவராக ஒரு நாளைக்கு பொறுப்பேற்றுள்ளார்.

கிராமப்புறங்களில் குழந்தைகளின் உரிமைகளுக்காகவும் வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பாரியை பிளான் இந்தியா என்னும் தனியார் நிறுவனம் தேர்ந்தெடுத்தது. குழந்தைகளுக்கு குறிப்பாக சிறுமிகளுக்கு கல்வி, மருத்துவம், பாதுகாப்பு ஆகியவற்றை வழங்கக் கோரும் குழந்தைகள் உரிமை அமைப்பான இந்த நிறுவனம்ஆண்டுதோறும் நடத்தி வரும் சர்வதேச பெண் குழந்தைகள் தின கொண்டாட்ட போட்டியில் பாரி வெற்றுபெற்றுள்ளார். இதனையடுத்து ஆஸ்திரேலியத் தூதரகத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில்:முறையான கல்வி மூலம் ஒருவர் நக்சலிசத்துக்கு எதிராக போராட முடியும். ஒவ்வொரு குழந்தைக்கும் நாம் கல்வியைத் தர வேண்டும். அவர்களே எது நல்லது எது கெட்டது என்று முடிவு செய்துகொள்வார்கள். கல்வியின் மூலமாகவே ஒருவர் தனது உரிமைகள் குறித்து அறிய முடியும். ஆஸ்திரேலிய தூதராக ஒரு நாள்பொறுப்பேற்றதில் மகிழ்ச்சி. என்னுடைய கிராமத்துக் குழந்தைகளுக்கு ரோல் மாடலாக இருப்பேன் என்கிறார்.
கிராமத்துக்குத் திரும்பிய பாரியைக் கண்டு பெற்றோர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். இது தங்கள் கிராமத்துக்கான பெருமை என்றனர். கிராமத்தினர் பாரிக்கு மாலை அணிவித்துக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து