முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேரு பிறந்த தினம்: டெல்லி நினைவிடத்தில் சோனியா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

புதன்கிழமை, 14 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : நேருவின் 129-வது பிறந்த தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 129-வது பிறந்த தினம் நேற்று  நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள நேரு நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இதேபோல் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில அலுவலகங்கள், கிளை கமிட்டி அலுவலகங்களிலும் நேருவிற்கு மரியாதை செலுத்தப்பட்டது. ஜவாஹர்லால் நேருவின் பிறந்த தினமானது குழந்தைகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து