முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று முதல் 10 நாட்களுக்கு கொடுமுடியாறு - நம்பியாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

புதன்கிழமை, 21 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று பாசனத்துக்காக கொடுமுடியாறு மற்றும் நம்பியாறு அணைகளில் இருந்து இன்று முதல் 31-ம் தேதி வரை 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

5780.91 ஏக்கர் நிலங்கள்...

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. அதை ஏற்று, கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு 22-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன். இதனால், திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி மற்றும் ராதாபுரம் வட்டங்களில் உள்ள 5780.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

10 நாட்களுக்கு...

திருநெல்வேலி மாவட்டம், நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து, பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அதை ஏற்று, நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து, வலது மற்றும் இடது மதகுகளின் பிரதான கால்வாயின் கீழ் பாசனம் பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசனப் பகுதிகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு 22-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நாள்தோறும் வினாடிக்கு 60 கன அடிக்கு மிகாமல், நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினைப் பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன்.

இதனால், திருநெல்வேலி மாவட்டம், திசையன்வினை வட்டத்தில் 1744.55 ஏக்கர் நிலங்கள் நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து