முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் ஜவுளி நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துணிப்பைகள் ஆணையாளர் விசாகன் வழங்கினார்

புதன்கிழமை, 27 மார்ச் 2019      மதுரை
Image Unavailable

மதுரை,- மதுரை நாடாளுமன்ற தேர்தல் 2019 நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் தனியார் ஜவுளி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு வாசகம் துணிப்பைகளை ஆணையாளர்  .ச.விசாகன்,    வழங்கினார்.
 மதுரை நாடாளுமன்ற தேர்தல் 2019 நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் மதுரை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் விழிப்புணர்வு மனிதச்சங்கிலி, விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வு கலைநிகழச்சிகள், மற்றும் விழிப்புணர்வு கோலப்போட்டிகள், விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. மேலும் தனியார் வணிக நிறுவனத்தினர், உணவகங்கள் உள்ளிட்டோர் பொதுமக்கள் தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தனியார் ஜவுளி நிறுவனத்தில் கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்கள் மற்றும்  பொதுமக்களுக்கு வழங்கும் பைகளில் தேர்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துணிப்பைகளை ஆணையாளர் அவர்கள் வழங்கி துவக்கி வைத்தார். மேலும் தனியார் நிறுவனம் மற்றும் உணவகங்களில் வழங்கும் இரசீதுகளில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பது நமது கடமை என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. 
 இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர்  .நர்மதாதேவி, தனியார் நிறுவன உரிமையாளர்  என்.பாலசுப்பிரமணியன்,  மக்கள் தொடர்பு அலுவலர்  .சித்திரவேல், சுகாதார அலுவலர்  நாகராஜ் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து