முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் ஆணையத்தின் தடைக்கு எதிரான மாயாவதியின் மனுவை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, தேர்தல் பிரசாரம் செய்ய விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான மாயாவதி முறையீட்டை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது.

உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த 11-ம் தேதி நடந்தது. தேர்தல் நடைபெற இருக்கும் தொகுதிகளில் மும்முரமாக பிரசாரம் நடைபெற்று வருகிறது. பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி பிரசாரம் செய்து வருகிறார்.

மாயாவதி கடந்த 7-ம் தேதி சகரன்பூர் என்ற இடத்தில் பிரசாரம் செய்யும் போது முஸ்லீம்கள் தங்கள் அணிக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மீரட் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், மாயாவதிக்கு பதில் அளிக்கும் வகையில் மத ரீதியாக சில கருத்துகளை தெரிவித்தார். இவ்வாறு மாயாவதியும், யோகி ஆதித்யநாத்தும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இரு சமூகத்தினரிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்ததாக முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று முதல் 3 நாட்களுக்கு தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்களில் கலந்து கொள்ளவும், பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கவும், சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கவும் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதேபோல், நேற்று முதல் 2 நாட்களுக்கு மாயாவதிக்கும் தடை விதித்து ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

பிரசாரம் செய்ய தடை விதித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை மாயாவதி நாடினார். ஆனால், மாயாவதி கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட், வெறுப்புணர்வை தூண்டும் அரசியல் தலைவர்களின் பிரசாரத்துக்கு தடை விதிக்கும் ஆணையத்தின் முடிவு ஏற்கப்படுவதாக தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து