முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானலில் தொடர் சாரல் மழை சூறைக்காற்று வீசியதில் வீட்டின் மீது மரம் விழுந்தது.

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2019      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல்-  கொடைக்கானலில் தொடர் சாரல் மழை சூறைக்காற்று வீசியதில் வீட்டின் மீது மரம் விழுந்தது.
 கொடைக்கானலில் நேற்றுமுன்தினம்  மாலை நேரத்தில் இருந்து தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்தது. சாரல் மழை விடாமல் பெய்தது. இரவு நேரத்தில் சூறைக்காற்று வீசியது. பலத்த காற்று காரணமாக கொடைக்கானல் கான்வென்ட் சாலை அருகே உள்ள கோவையைச் சேர்ந்த ஜெகன் என்பவரது மிகப் பழமையான பங்களா மீது ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் வீடு முற்றிலும் சேதமடைந்தது அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதேபோல இந்தப் பகுதியிலும் மற்றும் கொடைக்கானல் நகரப்பகுதிகளில் ஆபத்தான ராட்சத மரங்கள்  வீடுகளின் அருகே உள்ளது .இது போன்ற ஆபத்தான மரங்களை அகற்ற கொடைக்கானல் நகராட்சியும், வருவாய்த் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து