எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அத்திரவரதர் வைபவ காலத்தில் அல்லும் பகலும் அயராது உழைத்திட்ட அனைத்து துறை ஊழியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து எழுந்தருளியுள்ள அருள்மிகு அத்திவரதரின் வைபவம், 1.7.2019 முதல் சீரோடும் சிறப்போடும் நடைபெற்று 17.8.2019 அன்றுடன் நிறைவடையவுள்ளது. அம்மாவின் அரசு, விரிவான பாதுகாப்பு, குடிநீர், மருத்துவ முகாம்கள், போக்குவரத்து, அன்னதானம், கர்ப்பிணி பெண்கள், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வழி தரிசனம், உள்ளிட்ட பல வசதிகளை செய்து கொடுத்ததன் காரணமாக, இந்தியா முழுவதிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் அருள்மிகு அத்திவரதரின் தரிசனம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனது உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத் துறை, வருவாய் துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, பொதுப்பணித் துறை, போக்குவரத்துத் துறை, மின் துறை, உள்ளிட்ட அனைத்து அரசு துறையினரும், தேசிய மாணவர் படையினரும், தன்னார்வலர்களும், ஒருங்கிணைந்து மிக சிறப்பாக பணியாற்றியதன் விளைவாக, வருகை தந்த பக்தர்கள் அனைவரும் அருள்மிகு அத்திவரதரை சிறப்பாக தரிசித்து சென்றனர். குறிப்பாக, மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும், கோயில் ஊழியர்களும், அர்ச்சகர்களும் இரவு பகல் பாராமல் மிகச் சிறப்பாக ஒருங்கிணைந்து செயல்பட்டதன் காரணமாக அருள்மிகு அத்திவரதர் வைபவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அருள்மிகு அத்திவரதர் வைபவம் நடந்த காலக் கட்டத்தில் இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள், கண் விழித்து காஞ்சிபுரம் நகரில் தூய்மை பணிகளில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களின் பணி மிகவும் மெச்சத்தக்கது. இவர்கள் மேலும் இரண்டு நாட்கள் தங்கி காஞ்சிபுரம் நகரில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள நான் கேட்டுக் கொண்டுள்ளேன். காஞ்சிபுரம் நகரில் வசிக்கும் இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் இந்த 48 நாட்களும், வருகை தந்த பக்தர்களை வரவேற்று உபசரித்தது பாராட்டுக்குரியதாகும்.
எனது வேண்டுகோளை ஏற்று இந்த வைபவ காலத்தில் அன்னதானத்திற்கு நிதியுதவியும், ஆதரவும் வழங்கிய நன்கொடையாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அருள்மிகு அத்திவரதர் வைபவத்தினை சிறந்த முறையில் மக்களிடம் எடுத்துச் சென்ற பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்கும், இச்சமயத்தில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தன்னலம் பாராமல், இரவும், பகலும் அயராது உழைத்திட்ட அனைத்து துறையினருக்கும், குறிப்பாக வருவாய் துறை, காவல் துறை மற்றும் உள்ளாட்சித் துறையினருக்கும் மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த நன்றியினையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் அரசு வசூலிக்க கூடாது: எடப்பாடி
28 Apr 2024சென்னை, கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
மத்தியல் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம்: ராகுல் காந்தி
28 Apr 2024புவனேஸ்வர், மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
-
விஜயகாந்திற்கு வரும் 9-ம் தேதி பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது : சென்னையில் பிரேமலதா பேட்டி
28 Apr 2024சென்னை, விஜயகாந்திற்கு வரும் 9-ந்தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா துவங்கியது
28 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
-
சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
28 Apr 2024கொழும்பு, சீனாவின் உதவியால் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13-ல் கப்பல் சேவை தொடக்கம்
28 Apr 2024சென்னை, சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஓரிரு நாளில் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு: காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தகவல்
28 Apr 2024கவுகாத்தி, ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார்கள் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
-
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ உதவிகள்: ஆஸ்திரேலியா அறிவிப்பு
28 Apr 2024கீவ், உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
-
டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா
28 Apr 2024புது டெல்லி, டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி நேற்று ராஜினாமா செய்தார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறையால் குவியும் பக்தர்கள்: 18 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்
28 Apr 2024திருப்பதி, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜேக்ஸ்: குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
28 Apr 2024அகமதாபாத், வில் ஜேக்ஸ், விராட் கோலி அபார பேட்டிங்கில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
2 லீக் ஆட்டங்கள்...
-
ஸ்ட்ராங்ரூமில் சி.சி.டி.வி. செயலிழந்த விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு எல்.முருகன் அறிவுறுத்தல்
28 Apr 2024கோவை, நீலகிரியில் ஸ்ட்ராங்ரூமில் சி.சி.டி.வி.
-
உதகையில் 126-வது மலர் கண்காட்சி: மே 10-ல் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது
28 Apr 2024ஊட்டி, உதகையில் 126-வது மலர் கண்காட்சி மே மாதம் 10-ம் தேதி தொடங்கி மே 20-ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கும் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
கோடை வெயில் எதிரொலி: பழங்கள் விலை கிடுகிடு உயர்வு
28 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காய்கனிச் சந்தையில் பழங்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
-
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கருத்து: கேரளாவை சேர்ந்தவர் கைது
28 Apr 2024திருவனந்தபுரம், 'தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' என பேஸ்புக்கில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
-
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் நீதிபதி கடத்தல்
28 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் நீதிபதியை கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbs
-
உலக வில்வித்தைப்போட்டி: இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளி பதக்கம் வென்றார்
28 Apr 2024ஷாங்காய், சீனாவில் நடைபெற்று வரும் உலக வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
-
தமிழ்நாட்டில் புதிய உச்சம்: மின் நுகர்வு 45 கோடி யூனிட்டை தொட்டது
28 Apr 2024சென்னை, தமிழகத்தில் தினமும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு முன் எப்போதும் இல்லாததை விட புதிய உச்சத்தை தொட்டது.
-
தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்களை அகற்ற வாகன ஓட்டிகளுக்கு மே 1 வரை கெடு
28 Apr 2024சென்னை, தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் தேவையில்லாத ஸ்டிக்கர்கள் ஒட்டக்கூடாது என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ராகுல் குறித்து சர்ச்சை கருத்து: கேரள கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு
28 Apr 2024பாலக்காடு, ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
-
பேருந்து மீது லாரி மோதி விபத்து: 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி
28 Apr 2024லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் பேருந்து மீது லாரி மோதிய கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.