முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலியின் கருத்து பயிற்சியாளர் நியமனத்தில் எதிரொலிக்கவில்லை: கபில்தேவ்

சனிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

கேப்டன் கோலியின் கருத்து எந்த வகையிலும் பயிற்சியாளர் நியமனத்தில் எதிரொலிக்கவில்லை என சி.ஏ.சி. தலைவர் கபில் தேவ் கூறியுள்ளார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போதுள்ள ரவிசாஸ்திரியே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கபில் தேவ், அன்ஷுமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் கொண்ட சி.ஏ.சி. ஒருமனதாக சாஸ்திரியை தேர்வு செய்தது.

கேப்டன் கோலி முன்பு கூறுகையில்,

ரவிசாஸ்திரி அனைத்து வீரர்களுடனும் நன்கு பழகி உள்ளார். அணியின் அனைத்து அம்சங்களையும் அறிந்துள்ளதால், அவரையே தேர்வு செய்தால் நன்றாக இருக்கும் எனத் தெரிவித்தார். இதுதொடர்பாக கபில் தேவ் கூறியதாவது:

தலைமை பயிற்சியாளர் நியமனத்தில் கோலியின் கருத்து எந்த வகையிலும் எதிரொலிக்கவில்லை. நாங்கள் எவர் பேச்சையும் கேட்கவில்லை.

கோலியின் கருத்தை கேட்டிருந்தால், அணியின் ஒட்டுமொத்த வீரர்களின் கருத்தையும் கேட்டிருப்போம். இதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.

ஐசிசி போட்டிகளில் அரையிறுதியோடு அணி வெளியேறியது குறித்து கேட்ட போது, அவர் கூறுகையில், உலகக் கோப்பை வெல்லாத அணியின் மேலாளரை நீக்க வேண்டுமா?. ஒட்டுமொத்த சூழநிலையும் ஆய்வு செய்தோம். மேலும் அவரது விளக்கத்தையும் கேட்டோம். சாஸ்திரியின் தகவல் தொடர்பு திறன் பெரிய வித்தியாசத்தை காண்பிக்கிறது. அனைவரும் சிறந்தவர்கள் தான். ஆனால் தற்போதைய பயிற்சியாளராக உள்ளது சாஸ்திரிக்கு கூடுதல் பலமாக அமைந்தது என்றார். ஏற்கெனவே கடந்த 2018 டிசம்பரில் மகளிர் அணியின் பயிற்சியாளராக டபிள்யு வி.ராமனை தேர்வு செய்தது சி.ஏ.சி என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து