முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தென்மேற்கு பருவ மழை கடந்த 2 நாட்களாக பெய்து வருகிறது. வட மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்பட பல மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் 17 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மீனம்பாக்கத்தில் 27 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை, புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எழும்பூர், பாரிமுனை, கோயம்பேடு, வடபழனி, கிண்டி, அடையாறு, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், கூடுவாஞ்சேரி, மேடவாக்கம், மறைமலை நகர், வேளச்சேரி, துரைப்பாக்கம், சோழிங்க நல்லூர், நீலாங்கரை, திருவான்மியூர், மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயில், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் உள்பட பல இடங்களில் நேற்று காலை முதல் விடாமல் மழை பெய்தது. இதனால் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த நிலையில் இது குறித்து வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

தமிழகம், புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். இந்த மழை இன்று தொடர்ந்து பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து