முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வான் எல்லையை மூடப் போவதாக வெளியான தகவலுக்கு பாக். மறுப்பு

வியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்து வான் எல்லையை மூடப் போவதாக வெளியான தகவலை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மறுத்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த 5-ம் தேதி ரத்து செய்தது. அத்துடன், ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்துள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  அத்துடன் இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் பகுதிக்குள் இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்து, வான்வெளியை மூடுவது பற்றி பிரதமர் இம்ரான் கான் ஆலோசித்ததாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. பாகிஸ்தான் அமைச்சர் பாவத் உசைன் டுவிட்டரில் இதனை குறிப்பிட்டிருந்தார். எனவே, விரைவில் இந்திய விமானங்களுக்கான வான்வெளியை பாகிஸ்தான் மூடலாம் என பேசப்பட்டது. ஆனால் இந்த தகவலை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி மறுத்துள்ளார்.

இந்தியாவுக்கான வான்வெளியை மூடுவது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும், ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்த பிறகே அத்தகைய முடிவு எடுக்கப்படும் என்றும் குரேஷி கூறியுள்ளார். ஏற்கனவே பாலக்கோட் பயங்கரவாத முகாம்கள் மீத இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் பகுதிக்குள் விமானங்கள் பறக்க தடை விதித்து வான்வெளியை மூடியது. பின்னர் இந்திய விமானங்கள் தவிர மற்ற விமானங்கள் பறக்க அனுமதி அளித்தது. ஜூலை 16-ம் தேதி இந்திய போக்குவரத்து விமானங்கள் பறக்க அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து