முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் நடால், மெட்வேடேவ்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க் : அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால், ரஷ்யாவின் டேனியல் மெட்வேடேவ் மோதுகின்றனர்.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 24-ம் நிலை வீரரான இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரபேல் நடால் 7-6 (8-6), 6-4, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மெட்வேடேவ் தனது அரை இறுதி சுற்றில் 7-6 (7-5), 6-4, 6-3 என்ற நேர் செட்டில் 78-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்தினார். 23 வயதான டேனியல் மெட்வேடேவ் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் கால் பதிப்பது இதுவே முதன்முறையாகும். மேலும் 2005-ம் ஆண்டுக்குப் பிறகு கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் ரஷ்ய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் டேனியல் மெட்வே டேவ். கடைசியாக 2005-ம் ஆண்டு அந்நாட்டைச் சேர்ந்த மராட் சபின் ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் பங்கேற்று பட்டம் வென்றிருந்தார். 33 வயதான ரபேல் நடால் 19-வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்க உள்ளார். ஒட்டுமொத்தமாக அவர், பங் கேற்கும் 27-வது கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டி இதுவாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து