முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டுக்கு வந்து சேர்ந்த கிருஷ்ணா நீர்

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் நேற்று தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டுக்கு வந்து சேர்ந்தது.

சென்னை குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் தமிழக அமைச்சர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதைத் தொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது. கண்டலேறு அணையின் 2 மதகுகள் வழியாக நீர் பாய்ந்து வந்தது. முதலில் 1000 கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர் பின்னர் படிப்படியாக 1500 கனஅடியாக உயர்த்தப்பட்டது. கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது. ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 2000 கனஅடி கிருஷ்ணா நீர் திறக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது விநாடிக்கு 50 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தமிழகம் வந்து சேர்ந்த கிருஷ்ணா தண்ணீரை தமிழக அமைச்சர்கள் மலர் தூவி வரவேற்றனர். ஆந்திர மாநிலம் சோமசீலா அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அங்கிருந்து கண்டலேறு அணைக்கு நீர் ஒரு டி.எம்.சி. வீதம் அனுப்பப்பட்டு வருகிறது. எனவே கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு இந்த முறை கூடுதலாக கிருஷ்ணா தண்ணீர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து