முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.எஸ்.என்.எல் விருப்ப ஓய்வு திட்டத்தில் 2 நாளில் 22,000 பணியாளர்கள் விண்ணப்பம்

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் விருப்ப ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்ட 2 நாட்களில் சுமார் 22 ஆயிரம் பணியாளர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் பொதுத்துறையை சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், தனது கடன் விகிதத்தினை குறைக்க பல்வேறு துரித நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. பி.எஸ்.என்.எல் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதால்  பணியாளர்கள் ஓய்வு பெரும் திட்டத்தை மத்திய அரசு செவ்வாய்கிழமை அறிவித்தது.  ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பணியாற்றும் இந்த நிறுவனத்தில் ஒரு லட்சம் பேர் விருப்ப ஓய்வுபெற தகுதியுடையவர்கள் ஆவர். மேலும் இந்த விருப்ப ஓய்வூ திட்டம் வரும் டிசம்பர் 3-ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இத்திட்டத்தின் மூலம், விருப்ப ஓய்வு பெற அறிவிக்கப்பட்ட 2 நாட்களில் 22 பணியாளர்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 77 ஆயிரம் பேர் வரை விருப்ப ஓய்வு பெற விண்ணப்பிக்க வாய்ப்பிருப்பதாக உயரதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விருப்ப ஓய்வு பணியாளர்களை அச்சுறுத்துவதாக தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து