முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அங்கீகரிக்கப்படாத தனி நபர்களை விவாதத்திற்கு அழைக்க வேண்டாம்: ஊடகங்களுக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மீண்டும் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 11 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

அங்கீகரிக்கப்படாத தனி நபர்களை விவாதத்திற்கு அழைக்காதீர்கள். அங்கீகரிக்கப்பட்ட ஊடகப் பிரதிநிதிகளிடம் இருந்து மட்டுமே கருத்துகளைப் பெற வேண்டும் என்று அ தி.மு.க. தலைமை மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து அ தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தொலைக்காட்சிகளிலும், இன்னபிற சமூகத் தொடர்பு ஊடகங்களிலும், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடா்பாளர்கள் மட்டுமே கழகத்தின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை பற்றி விளக்கம் அளிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை விளக்கி, தலைமை கழக அறிவிப்பாக கடந்த 19.12.2019 அன்று அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது. கழகத்தால் அங்கீகரிக்கப்படாத நபர்களை அ.தி.மு.க.வின் பிரதிநிதிகளாக அடையாளப்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. தொடர்ந்து சில ஊடகங்கள் கழகத்தால் அங்கீகரிக்கப்படாத சில தனி நபர்களை கழகத்தின் பிரதிநிதிகளாக அடையாளப்படுத்தி நிகழ்ச்சிகளில் பங்கு பெற வைப்பதை உடனடியாக நிறுத்துமாறு மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

தனி நபர்கள் அ தி.மு.க.வின் நிலைப்பாடுகளைப் பற்றி தங்கள் சொந்தக் கருத்துகளைக் கூறுவதும், ஊடகங்கள் அத்தகைய தனிநபா்களை கழகத்தவர்களாக அடையாளப்படுத்துவதும் முறையற்ற செயல்கள் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறோம். இத்தகைய பொறுப்பற்ற வேலைகளில் ஈடுபடும் ஊடகங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை அ.தி.மு.க. மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதால் இந்த வேண்டுகோளையும், நினைவூட்டலையும் மனதிற்கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். தொலைக்காட்சி மற்றும் சமூக தொடர்பு ஊடகங்களின் மேலான ஒத்துழைப்பை இந்த முக்கியமான விவகாரத்தில் அன்புடன் எதர்பார்க்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து