முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெயிலில் பயணம் மேற்கொள்ள ‘இ-பாஸ்’ கட்டாயம்: தெற்கு ரெயில்வே

திங்கட்கிழமை, 1 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : தெற்கு ரெயில்வே சார்பில் தமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்கள் மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கும், திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கும், கோவையில் இருந்து மயிலாடுதுறை மற்றும் காட்பாடிக்கும் செல்கின்றன. இந்த ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

இந்தநிலையில் இந்த சிறப்பு ரெயில்களில் பயணிக்க ‘இ-பாஸ்’ கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- அரசு உத்தரவின்படி ரெயிலில் பயணம் மேற்கொள்ளும் அனைத்து பயணிகளும் ‘இ-பாஸ்’ பெற்றிருக்க வேண்டும்.

ஒரு மண்டலத்திலிருந்து வேறு மண்டலத்திற்கோ அல்லது மாவட்டத்திற்கோ அல்லது மாநிலத்திற்கோ ரெயில் மூலம் செல்ல விரும்புவோர் கட்டாயம் தமிழக அரசிடம் ‘ஆன்-லைன்‘ மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்து ‘இ-பாஸ்‘ பெற்று இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

செத்தால்தான் இ-பாஸா..?

நெருங்கிய உறவினர் திருமணம் அல்லது மரணம் அல்லது மருத்துவ சிகிச்சை போன்ற காரணங்களுக்குத்தான் இ பாஸ் வழங்கப்படுமென்று அரசு கூறுகிறது. அப்படியானால், ரெயிலில் பயணிக்கும் பயணிகள் வீட்டில் யாராவது சாக வேண்டும் அல்லது யாருக்காவது சிகிச்சை நடைபெற வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகம் எதிர்பார்க்கிறதா என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்.

இப்படி நிபந்தனை போடுவதற்குப் பதில் ரயில்களை இயக்காமல் இருக்கலாமே என்று மக்கள் கேட்கிறார்கள். மேலும் இ பாஸ் விண்ணப்பம் செய்வதற்கு படித்தவர்களாக இருக்க வேண்டும். படிக்காத பாமர மக்கள் என்ன செய்வார்கள். இதைப் பற்றியெல்லாம் ரெயில்வே நிர்வாகம் சிந்திக்க வேண்டும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து