முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் : மத்திய அரசுக்கு மம்தா கோரிக்கை

புதன்கிழமை, 3 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒருமுறை நிவாரணமாகப் பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். 

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு கடைப்பிடிப்பால் வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் அவர்களின் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியுள்ளனர். இது குறித்து டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, 

கொரோனா பெருந்தொற்றால் கற்பனை செய்ய முடியாத இன்னல்களை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். தற்போதைய நிலையில் ஏற்பட்டுள்ள தொற்றுநோய் காரணமாக கற்பனைக்கு எட்டாத விகிதத்தில் மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அமைப்புசாரா துறையில் உள்ளவர்கள் உள்பட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.10 ஆயிரம் வழங்குமாறு மத்திய அரசிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். மேலும் பிரதமர் நிவாரண நிதியின் ஒருபகுதியை இதற்காகப் பயன்படுத்தலாம் என்றும் மம்தா பானர்ஜி டுவிட்டரில்  பதிவு செய்துள்ளார். 

முன்னதாக, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ரூ.3,100 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. இதில், ரூ.2 ஆயிரம் கோடி வெண்டிலேட்டர்கள் வாங்கவும், ஆயிரம் கோடி ரூபாய் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவவும் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசி வளர்ச்சிக்கு ரூ.100 கோடியை பயன்படுத்தவும் மத்திய அரசு ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து