முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை 3-வது நாளாக குறைவு: சவரன் தங்கம் ரூ. 40,104-க்கு விற்பனை

புதன்கிழமை, 12 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ. 1,832 குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு  உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

கடந்த ஜூலை மாத இறுதியில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை 41 ஆயிரம் ரூபாயைக் கடந்தது. இந்த நிலையில்  3-வது நாளாக   தங்கம் விலை சரிவை சந்தித்து வருகிறது. 

நேற்றைய நிலவரப்படி  ஒரு சவரன் ஆபரண  தங்கத்தின் விலை நேற்று முன்தின விலையில் இருந்து 1,832 -ரூபாய் குறைந்து, ரூ. 40,104-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் ஆபரணத்தங்கம்  ரூ. 229 குறைந்து  ஒரு கிராம் 5,013- ஆக விற்பனையானது. கடந்த 4 நாட்களில் தங்கத்தின் விலை ரூ.2,400-வரை குறைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து